
गुडान्नप्रीतमानसा gudanna pritamanasa வெல்லம் சேர்த்து செய்த அன்னத்தை விரும்பும் மனமுடையவள் समस्तभक्तसुखदा Samasta bhakta sukhada எல்லா பக்தர்களுக்கும் சுகத்தை அளிப்பவள் लाकिन्यम्बास्वरूपिणी lakinyamba svarupini லாகினி என்னும் யோகினியின் உருவில் இருப்பவள் स्वाधिष्ठानाम्बुजगता Svadhishtanambujagata ஸ்வாதிஷ்டானத்தில் உள்ள ஆறு தள பத்மத்தில் அமர்பவள் चतुर्वक्त्रमनोहरा chaturvaktra manohara நான்கு அழகிய முகங்களைக் கொண்டவள் शूलाद्यायुधसम्पन्ना Shuladyayudha sampanna சூலம் முதலான ஆயுதங்களை தரித்தவள் पीतवर्णा pitavarna மஞ்சள் நிறத்தவள் अतिगर्विता atigarvita அதிக கர்வம் கொண்டவள் मेदोनिष्ठा Medhonishta உயிர்களில் உள்ள கொழுப்பில் நிலை கொள்பவள் मधुप्रीता maduprita தேனை விரும்புபவள் बन्धिन्यादिसमन्विता bandinyadi samanvita பந்தினி முதலான சக்திகளோடு கூடி இருப்பவள் दध्यन्नासक्तहृदया Dadyannasakta hrudaya தயிர் சேர்த்த அன்னத்தை விரும்பும் இதயம் கொண்டவள் काकिनीरूपधारिणी kakini rupadharini காகினி என்னும் யோகினியின் உருவைத் தரித்தவள் मूलाधाराम्बुजारूढा Muladharambujarudha மூலாதாரம் என்னும் தாமரையில் அமர்ந்தவள் पञ्चवक्त्रा panchavaktra ஐந்து முகங்களை உடையவள் अस्थिसंस्थिता asthi samsthita உயிர்களின் எலும்புகளில் அமைபவள் अङ्कुशादिप्रहरणा Ankushadi praharana அங்குசம் முதலான ஆயுதங்களைத் தாங்கியவள் वरदादिनिषेविता varadadi nishevita வரதா முதலிய சக்திகளால் சேவிக்கப்படுபவள் मुद्गौदनासक्तचित्ता Mudgaodanasaktachitta பச்சைப் பயறால் செய்த உணவுகளை விரும்பும் மனம் கொண்டவள் साकिन्यम्बास्वरूपिणी sakinyamba svarupini சாகினி என்னும் யோகினியின் உருவில் இருப்பவள் आज्ञाचक्राब्जनिलया Aagynachakrabja nilaya ஆஞ்ஞா சக்ரம் என்னும் இரண்டு தள பத்மத்தில் இருப்பவள் शुक्लवर्णा shuklavarna வெண்ணிறத்தவள் षडानना shadanana ஆறு முகங்களைக் கொண்டவள் मज्जासंस्था Majjasamstha எலும்பு மஜ்ஜையில் இருப்பவள் हंसवतीमुख्यशक्तिसमन्विता hamsavati mukhyashakti samanvita ஹம்ஸவதி என்னும் முக்கிய சக்தியோடு இருப்பவள் हरिद्रान्नैकरसिका Haridranaikarasika மஞ்சள் சேர்த்த அன்னங்களின் ரசிகை हाकिनीरूपधारिणी hakinirupa dharini ஹாகினி என்னும் தேவியின் உருவைத் தாங்கியவள் सहस्रदलपद्मस्था Sahasradala padmastha ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில் இருப்பவள் सर्ववर्णोपशोभिता sarvavarnopashobhita அனைத்து நிறங்களிலும் ஜொலிப்பவள் सर्वायुधधरा Sarvayudhadhara எல்லா ஆயுதங்களையும் தரித்தவள் शुक्लसंस्थिता shukla samsthita சுக்லத்தில் இருப்பவள் सर्वतोमुखी sarvatomukhi எல்லா திசைகளிலும் முகம் கொண்டவள் सर्वौदनप्रीतचित्ता Sarvaodana pritachitta எல்லாவித உணவுகளையும் விரும்புபவள் याकिन्यम्बास्वरूपिणी yakinyanba svarupini யாகினி என்னும் யோகினியின் உருவில் இருப்பவள் स्वाहा Svaha ஸ்வாஹா என்னும் மந்திரமாய் இருப்பவள் स्वधा svadha ஸ்வதா என்னும் மந்திரமாய் இருப்பவள் अमतिः amati மதியீனமாக இருப்பவள் मेधा medha மேதையானவள் श्रुतिः shrutih வேதமாக இருப்பவள் स्मृतिः smruti ஸ்மிருதியாக இருப்பவள் अनुत्तमा anuttama தன்னை விட மேன்மையானவர் இல்லாதவள் पुण्यकीर्तिः Punyakirtih புனிதமான புகழை உடையவள் पुण्यलभ्या punyalabhya புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே லபிப்பவள் पुण्यश्रवणकीर्तना punyashravanakirtana அவள் புகழைக் கேட்பவருக்கு புண்ணியம் அளிப்பவள் पुलोमजार्चिता Pulomajarchita புலோமஜையால்(இந்திராணியால்) அர்ச்சிக்கப்படுபவள் बन्धमोचनी bandhamochani பந்தங்களிலிருந்து விடுவிப்பவள் बर्बरालका barbaraalaka அலை போன்ற கூந்தலை உடையவள் विमर्शरूपिणी Vimarsharupini அர்த்த வடிவானவள் विद्या vidya கல்வி வடிவானவள் वियदादि जगत्प्रसूः viyadadi jagatprasuh 'வெளி' தொடங்கி ஜகம் முழுவதையும் பிரசவித்தவள் सर्वव्याधिप्रशमनी Sarvavyadhi prashamani எல்லா வியாதிகளையும் தீர்ப்பவள் सर्वमृत्युनिवारिणी sarvamrutyu nivarini எல்லா இறப்புகளையும் நிவாரணம் செய்பவள் अग्रगण्या Agraganya முதன்மையானவளாக நினைக்கப் படுபவள் अचिन्त्यरूपा achintyarupa நினைக்க முடியாத ரூபம் கொண்டவள் कलिकल्मषनाशिनी kalikalmashanashini கலியினால் உண்டாகும் பாவத்தை போக்குபவள் कात्यायनी Katyayani 'காத' என்னும் முனிவரின் மகளானவள் कालहन्त्री kalahantri காலனை வதம் செய்பவள் कमलाक्षनिषेविता kamalaksha nishevita தாமரைக் கண்ணனால்(விஷ்ணுவால்) சேவிக்கப்படுபவள் ताम्बूलपूरितमुखी Tambulapuritamukhi தாம்பூலத்தால் நிறைந்த வாயை உடையவள் दाडिमीकुसुमप्रभा dadimikusumaprabha மாதுளைப் பூவைப் போல் பிரகாசிப்பவள் मृगाक्षी Mrugashi மான்விழி கொண்டவள் मोहिनी mohini மோகம் கொள்ளச் செய்பவள்(மயக்குபவள்) मुख्या mukhya முதன்மையானவள் मृडानी mrudani மிருடனின் (சிவனின்) மனைவி मित्ररूपिणी mitrarupini அனைவருக்கும் தோழியாய் இருப்பவள் नित्यतृप्ता Nityatrupta எப்போதும் திருப்தி கொண்டவள் भक्तनिधिः bhaktanidhi பக்தர்களின் பொக்கிஷமானவள் नियन्त्री niyantri அனைவரையும் நியமத்தில் நடக்கச் செய்பவள் निखिलेश्वरी nikhileshvari அனைவருக்கும் தலைவி मैत्र्यादिवासनालभ्या Maityradi vasanalabhya மைத்ரீ(அன்பு/தோழமை/இயைந்திருத்தல்) முதலிய குணங்களால் கிடைப்பவள் महाप्रलयसाक्षिणी mahapralayasakshini மஹா பிரளயத்தின் சாக்ஷியாய் இருப்பவள் पराशक्तिः Parashaktih பராசக்தி (உச்ச ஆற்றல்) परानिष्ठा paranishta உச்ச நிஷ்டை/இலக்கு प्रज्ञानघनरुपिणी pragynana ghanarupini அடர்ந்த சுத்த ஞானத்தின் உருவானவள் माध्वीपानालसा Madhvipanalasa மது பானத்தால் சோம்பியிருப்பவள்(எதையும் பெரிதாகக் கருதாதவள்) मत्ता matta போதையேறியவள் मातृकावर्णरूपिणी matrukavarna rupini எழுத்து வடிவானவள் महाकैलासनिलया Mahakailasa nilaya மஹாகைலாஸத்தில் வசிப்பவள் मृणालमृदुदोर्लता mrunala mrududorlata தாமரைத் தண்டைப் போன்று மிருதுவான கைகளை உடையவள் महनीया Mahaniya மேன்மை பொருந்தியவள் दयामूर्तिः dayamurti இரக்கத்தின்(அருள்) வடிவானவள் महासाम्राज्यशालिनी mahasamrajyashalini மஹா சாம்ராஜ்யத்தை நடுத்துபவள் आत्मविद्या Aatmavidya ஆத்ம ஞானமானவள்(சுயத்தைப் பற்றிய அறிவானவள்) महाविद्या mahavidya பேரறிவானவள் श्रीविद्या shreevidya ஸ்ரீவித்யை ஆனவள் कामसेविता kamasevita காமனால் சேவிக்கப் படுபவள் श्रीषोडशाक्षरीविद्या Shree shodashaksharividya பதினாறு எழுத்துக்களைக் கொண்ட மந்த்ர வடிவானவள் त्रिकूटा trikuta பஞ்சதசீ மந்த்ரத்தின் மூன்று பகுதிகளாக இருப்பவள் कामकोटिका kamakotika காமனைத் தன்னொரு பகுதியாகக் கொண்டவள் कटाक्षकिङ्करीभुतकमलाकोटिसेविता Katakshakinkaribhuta kamala kotisevita தன் பார்வையாலேயே சேவகம் செய்யும் கோடி லக்ஷ்மிகளை கட்டுப் படுத்துபவள் शिरःस्थिता Shirasthita தலையில் இருப்பவள் चन्द्रनिभा chandranibha சந்திரனைப் போல ஜொலிப்பவள் भालस्था bhalastha புருவங்களுக்கு நடுவில் இருப்பவள் इन्द्रधनुःप्रभा indra dhanuh prabha வானவில்லைப் போன்று அழகானவள் हृदयस्था Hrudayastha இதயத்தில் வசிப்பவள் रविप्रख्या ravi prakhya சூர்ய ஒளியைப் போன்றவள் त्रिकोणान्तरदीपिका trikonantara dipika முக்கோணத்தின் நடுவே உள்ள தீபம் போல ஒளி தருபவள் दाक्षायणी Dakshayani தக்ஷ பிரஜாபதியின் மகளானவள் दैत्यहन्त्री daityahantri தைத்யர்களை அழித்தவள் दक्षयज्ञविनाशिनी dakshayagyna vinashini தக்ஷனின் யாகத்தை அழித்தவள்