பெயரன்

விருந்துண்டு முடித்திருந்தார்கள்
அன்று
அவள் வீட்டில் 
பெயர் சூட்டு விழா

கை கழுவித் திரும்பும் வழியில்
கண்ணில் பட்டது
அவள் சேலை

அறியாமலேயே
அருகில் சென்று விட்டான்

கண் மூடி நின்றான்

காற்றில் ஆடிய சேலை
அவன்
கன்னம் தொட்டது

பெருமூச்சுடன்
மெல்ல
அங்கிருந்து விலகினான்

அவள்
பெயரனின்
கன்னத்தோடு
தன் கன்னம்
சேர்த்துக் கொண்டாள்