வரையத் தொடங்கினேன்
இருவரை
மிக அருகருகென
பெரிய கோடுகள் இட்டேன்
பக்கம் பக்கம்
எதற்கு
இரு சிறு கோடுகள் போதும்
இதழ்களைக் காட்ட
வேண்டாம்
இரு புள்ளிகள் கூட போதும்
அவற்றின் ஒளியைக் காட்ட
சொல்லப் போனால்
ஒரு புள்ளி போதும்
முத்த நொடியைக் காட்ட
ஒவ்வொரு புள்ளியாய் வைக்க ஆரம்பித்தேன்
சுற்றிலும் இருந்த மரங்களுக்காக
கன்றுகளுக்காக
குழலுக்காக
காற்றுக்காக
அதில் பிறந்த பாட்டுக்காக
ஒரு புள்ளிக்கு மேல்
எதைப் பற்றியும்
சொல்ல
என்ன இருக்கிறது