துளிக் கனவு

விராடன் நீ
பிரம்மாண்டம்

உன் நகக்கண்
சவ்வு நான்
கனவுத் துளி
துளிக் கனவு

நான் என்னோடு இருப்பதால்
சத்தியம் பூர்ணிக்கிறது
உனக்கு

துளித் துளித் துளி
சத்தியங்களால் ஆன
பூர்ணன்