ஊமையிருள் நடனம்

என் கேள்விக்கு
பதிலாக
உன்னை இறுக்கிக் கொண்ட
போது

ஊமை இருளைத் தொட்டு
கரி
பூசி விட்டிருந்தாய்

அடியற்ற பாதாளம்
முடிவற்ற இருட்டு

தேடித் தேடி
என் நடனம்

உறுதியாய்
சுருட்டிக் கொண்ட
பிளக்க முடியா
அணுவிலும் அணுவாய் நீ

சரி போ
இம்முறை நீ ஜெயித்து விட்டாய்

விலகிக் கொள்கிறேன்

மீண்டும்
ஊறிய
ஈர முத்தங்களோடு

நான் வரப்போகும்
மறு முறைக்காக