கரைந்து அழுதேன்
அடிவயிறு துடிக்கத் துடிக்க
துக்கம் கொண்டேன்
ஒவ்வொன்றாய்
கழன்று விழ
ஆரம்பித்தன
கண்கள்
கைகள்
இதயம்
கண்ணீர்
ரத்தம்
இதோ இதுவே
கடைசித் துளி
என்றெண்ணினேன்
பின்னும்
மினுக்கென்று
ஓர் ஒற்றை சிறுஞ்சுடர்
இத்தனை பெரிய மொத்தத்தையும்
சின்ன தான் இழுத்துப் பிடித்து
நின்றெரிந்தது
எங்கே
எது