தலை விரித்துப் போட்டு
ஆடுவேன்
ஒற்றை ஆடையில்
உடை நெகிழ
படுத்துக் கிடப்பேன்
கோணப்பல் தெரியும்
இளிப்பும் உண்டு
உதடு பிதுங்கப் பிதுங்க
ஊளையிட்டு
அழவும் முடியும்
மூக்கொழுகும்
சில நேரம்
மூத்திரத் துளி கூட
சொல்
ஒளி சிந்தும்
புன்னகை
மட்டும் தான்
வேண்டுமா
தலை விரித்துப் போட்டு
ஆடுவேன்
ஒற்றை ஆடையில்
உடை நெகிழ
படுத்துக் கிடப்பேன்
கோணப்பல் தெரியும்
இளிப்பும் உண்டு
உதடு பிதுங்கப் பிதுங்க
ஊளையிட்டு
அழவும் முடியும்
மூக்கொழுகும்
சில நேரம்
மூத்திரத் துளி கூட
சொல்
ஒளி சிந்தும்
புன்னகை
மட்டும் தான்
வேண்டுமா