மூக்கு என்று தான் விளிக்கிறார்கள்
எல்லாவற்றிலும் முந்திக் கொண்டு வந்து விடுகிறது
பொட்டென்று ஒன்று தலையிலேயே வைக்கிறேன்
இன்னும் கொஞ்சம் இளிக்கிறது
இல்லை இல்லை என்றுவிட்டு
கொஞ்சமே கொஞ்சம்
மறைவதாய் பாவ்லா
தானே பிரதானமாய்
மீண்டும் ஆஜர்
வெட்கம் இல்லை
காலங்காலமாய் வாழ்கிறது