இருட் பூ

இன்று
ஒளிந்து
பூத்திருந்தது
கண்ணெட்டா இருளில்

நேற்று
கை எட்டாத் தொலைவில்

வளைத்துப் பிடித்து
நுனிக் காலில் எக்கி
எப்படியோ
பறித்துத் தான் விடுகிறேன்

கோர்த்து
மாலையாக்கி
சூட்டியும் தான் விடுகிறேன்

ஒவ்வொரு நாளும்
உனதை