
अयि सबल मुरारे पाणिजानुप्रचारै:
किमपि भवनभागान् भूषयन्तौ भवन्तौ ।
चलितचरणकञ्जौ मञ्जुमञ्जीरशिञ्जा-
श्रवणकुतुकभाजौ चेरतुश्चारुवेगात् ॥१॥
ஹே முராரி, பலராமனுடன் சேர்ந்து, கைகளாலும் முட்டிகளாலும் தவழ்ந்து நந்தகோபனுடைய வீட்டை ஆபரணங்களாக, இருவரும் மிக அழகாக்கினீர்கள். நீங்கள் தவழும் போது கால்களில் உள்ள சலங்கைகளால் உண்டாகும் சப்தத்தால் மேலும் குதூகலமடைந்து இன்னும் வேகமாக தவழ்ந்தீர்கள்.
मृदु मृदु विहसन्तावुन्मिषद्दन्तवन्तौ
वदनपतितकेशौ दृश्यपादाब्जदेशौ ।
भुजगलितकरान्तव्यालगत्कङ्कणाङ्कौ
मतिमहरतमुच्चै: पश्यतां विश्वनृणाम् ॥२॥
இருவரும் மென்மையாக சிரிக்கிறீர்கள்; அதனால் உங்கள் பற்கள் கொஞ்சமாகத் தெரிகின்றன; இருவரின் முடியும் உங்களின் முகத்தின் மீது அழகாக விழுந்திருக்கிறது; தாமரை போன்ற அழகான கால்களை உடையவர்கள் நீங்கள்; உங்கள் தோள்களில் உள்ள அணிகள் மணிக்கட்டுகளில் நழுவி விழுந்திருக்கின்றன; இவற்றாலெல்லாம் உங்களை காண்பவர்களின் மனதை எல்லாம் தீவிரமாக கவர்கிறீர்கள்.
अनुसरति जनौघे कौतुकव्याकुलाक्षे
किमपि कृतनिनादं व्याहसन्तौ द्रवन्तौ ।
वलितवदनपद्मं पृष्ठतो दत्तदृष्टी
किमिव न विदधाथे कौतुकं वासुदेव ॥३॥
ஓ வாசுதேவனே, மகிழ்ச்சியும் சலிப்பும் உடைய கண்களுடன் உங்களைத் தொடரும் ஜனங்களிடமிருந்து தப்பிக்க ஒரு ஒலியை செய்து கொண்டு சிரித்துக் கொண்டு ஓடுகிறீர்கள். பின், தாமரை போன்ற முகத்தைத் திருப்பி பின்னாலும் பார்த்துக் கொள்கிறீர்கள். உங்களால் எந்த வித மகிழ்ச்சி தான் தரப்படவில்லை?
द्रुतगतिषु पतन्तावुत्थितौ लिप्तपङ्कौ
दिवि मुनिभिरपङ्कै: सस्मितं वन्द्यमानौ ।
द्रुतमथ जननीभ्यां सानुकम्पं गृहीतौ
मुहुरपि परिरब्धौ द्राग्युवां चुम्बितौ च ॥४॥
வேகமாக சென்றதினால் இருவரும் கீழே விழுந்து எழுந்து உடலை சேறாக்கிக் கொண்டீர்கள். அதை மிகத் தூய்மையான முனிவர்கள், ஒரு புன்னகையுடன் ஆகாயத்திலிருந்து பார்த்தார்கள். கீழே விழுந்ததும் உங்களின் தாய்மார்கள் ஓடி வந்து உங்களைத் தூக்கி மிகுந்த கருணையுடன் ஆலிங்கனம் செய்து கொண்டார்கள். மீண்டும் மீண்டும் உங்களுக்கு முத்தம் தந்தார்கள்.
स्नुतकुचभरमङ्के धारयन्ती भवन्तं
तरलमति यशोदा स्तन्यदा धन्यधन्या ।
कपटपशुप मध्ये मुग्धहासाङ्कुरं ते
दशनमुकुलहृद्यं वीक्ष्य वक्त्रं जहर्ष ॥५॥
மிகவும் மென்மையானவளான யசோதா, தானாக பால் சொரிந்ததினால் ஈரமான முலைகளுடன் உங்களை எடுத்து தன் மடி மீது வைத்துக் கொண்டாள். உங்களுக்கு முலை தருவதினாலேயே அவள் பெரும் பேறு பெற்றவளானாள். இடையனைப் போல வேடம் பூண்டவரான நீங்கள் பால் அருந்தும் போது, மொட்டு போன்ற பற்களைக் காட்டி வசீகரிக்கும் புன்னகை சிந்திய போது, அதைப் பார்த்து அவள் பரவசமடைந்தாள்.
तदनुचरणचारी दारकैस्साकमारा-
न्निलयततिषु खेलन् बालचापल्यशाली ।
भवनशुकविडालान् वत्सकांश्चानुधावन्
कथमपि कृतहासैर्गोपकैर्वारितोऽभू: ॥६॥
பின் நடந்து செல்லும் பருவத்தில், இடையர் குல பாலகர்களோடு சேர்ந்து கொண்டு அக்கம் பக்கத்து வீடுகளில் பல பால சேஷ்டைகள் செய்தீர்கள். வீடுகளில் வளரும் கிளிகளையும், பூனைகளையும், கன்றுகளையும் துரத்தும் உங்களை எப்படியோ கஷ்டப்பட்டு கோபர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.
हलधरसहितस्त्वं यत्र यत्रोपयातो
विवशपतितनेत्रास्तत्र तत्रैव गोप्य: ।
विगलितगृहकृत्या विस्मृतापत्यभृत्या
मुरहर मुहुरत्यन्ताकुला नित्यमासन् ॥७॥
பலராமனுடன் நீங்கள் எங்கு சென்றாலும், கோபிகைகள், ஸ்வாதீனமற்று பதிந்த கண்களுடன் உங்களைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் தங்கள் வீட்டு வேலைகளையும், வேலையாட்களையும் குழந்தைகளையும் கூட மறந்து விட்டார்கள். முரஹரி, அவர்கள் மீண்டும் மீண்டும் மிகுந்த சோகம் உடையவர்களாக காணப் பட்டார்கள்.
प्रतिनवनवनीतं गोपिकादत्तमिच्छन्
कलपदमुपगायन् कोमलं क्वापि नृत्यन् ।
सदययुवतिलोकैरर्पितं सर्पिरश्नन्
क्वचन नवविपक्वं दुग्धमप्यापिबस्त्वम् ॥८॥
நீங்கள் புது வெண்ணெய்க்காக, கோபிகைகளுக்கு பாடிக் காட்டினீர்கள். சில சமயம் அழகாக நடனமும் ஆடினீர்கள். அதைப் பார்த்த கோபிகைகள் மிகுந்த இரக்கத்துடன் நெய் தந்தார்கள். சில சமயம் புதிதாக காய்ச்சப்பட்ட பாலும் தந்தார்கள். அதைத் தாங்கள் அருந்தினீர்கள்.
मम खलु बलिगेहे याचनं जातमास्ता-
मिह पुनरबलानामग्रतो नैव कुर्वे ।
इति विहितमति: किं देव सन्त्यज्य याच्ञां
दधिघृतमहरस्त्वं चारुणा चोरणेन ॥९॥
பலியிடம் யாசகம் பெற்றாகிவிட்டது என்பதனால் இந்த அபலைகளிடம் யாசிக்க மாட்டேன் என்று முடிவு செய்து அவர்களின் தயிரையும் நெய்யையும் புதுப்புது மயக்கும் வழிகளில் திருடினீர்களா தேவனே?
तव दधिघृतमोषे घोषयोषाजनाना-
मभजत हृदि रोषो नावकाशं न शोक: ।
हृदयमपि मुषित्वा हर्षसिन्धौ न्यधास्त्वं
स मम शमय रोगान् वातगेहाधिनाथ ॥१०॥
ஆனால் தங்களுடைய திருட்டினால் அந்த கோபிகைகள் கொஞ்சமும் கோபமோ, வருத்தமோ அடைய வில்லை. மாறாக உங்களால் ஆனந்தக் கடலில் மூழ்கடிக்கப் பட்டார்கள். அப்படிப்பட்ட குருவாயூரப்பனே, என் நோயைத் தீர்க்க வேண்டும்.
शाखाग्रे विधुं विलोक्य फलमित्य्म्बां च तातं मुहु:
संप्रार्थ्याथ तदा तदीयवचसा प्रोत्क्षिप्तबाहौ त्वयि।
चित्रं देव शशी स ते कर्मगात् किं ब्रूमहे संपत:
ज्योतिर्मण्डलपूरिताखिलवपु: प्रागा विराड्रूपताम् ॥ ११॥
கொம்பின் நுனியில் சந்திரனைப் பார்த்து விட்டு பழம் என்று நினைத்து தங்கள் அன்னை தந்தையிடம் அது வேண்டும் என மீண்டும் மீண்டும் கேட்டீர்கள். அதைப் பார்த்த சந்திரன் தங்கள் கைகளுக்கு வந்து விட்டான். அவனோடு கூட நக்ஷத்திர மண்டலங்களும் வந்து விட்டன. அனைத்தையும் அணிந்து விராட ரூபம் கொண்டவராக ஒரு கணத்தில் தோன்றினீர்கள்.
किं किं बतेदमिति संभ्रम भाजमेनं
ब्रह्मार्णवे क्षणममुं परिमज्ज्य तातम् ।
मायां पुनस्तनय-मोहमयीं वितन्वन्
आनन्दचिन्मय जगन्मय पाहि रोगात् ॥१२॥
‘இது என்ன, இது என்ன’ என்று அதிசயித்த உங்கள் தந்தையை ஒரு கணம் நீங்கள் பிரம்மக் கடலின் ஆனந்தத்தில் மூழ்கடித்தீர்கள். பின் மகன் என்னும் மாயையை அவருக்கு அளித்தீர்கள். அதனால் ஆனந்தமயனே, சின்மயனே, ஜகன்மயனே என் நோயிலிருந்து காத்தருள வேண்டும்.