
இப்போதெல்லாம்
வாய் விட்டு சிரித்து விடுகிறேன்
எதிரில் யாரும் இல்லையென்றாலும்
நள்ளிரவின் தனிமையில் கூட
முத்தம் கொடுக்கிறேன்
தலையணைக்காவது
முத்தச் சத்தம்
மயக்கத்தான் செய்கிறது
எவரின் அணைப்பிலோ இருப்பதாக
எவராலோ காதலிக்கப்படுவதாக
எல்லாம் சரியாக இருப்பதாக