ஈடு

இது
இத்தனை தூயதா
இதன் முன் நான்
என் செய்வேன்

நெஞ்சம் கனக்கிறது

ஆழத்து
கண்ணீரை 
ஒரு துளி
இறக்கி வைக்கிறேன்

ஒரு வேளை
என் 
பாரம் குறையலாம்