நெடுஞ்சாலைக் கடல்

என்னில் நான் நிறைந்து
அமைந்திருந்தேன்

ஆம்
அப்படித் தான் துவங்கியது

கடும் கோடை
துளித் துளியாய் இழந்தேன்
வெறும் உப்பாய் மிஞ்சுகிறேன்

பூத்து சிரிக்கும் என்னை
ஒரு பரிசுப் பெட்டியிலிட்டு
உங்களுக்குத் தருவேன்

அதை
நெடுஞ்சாலையில் தூக்கி எறிவீர்கள்

அனைவர் கண்ணிலும் படும்படி
எவராலும் காப்பாற்ற முடியாதபடி
ஒரு சக்கரத்திலிருந்து
இன்னொரு சக்கரத்திற்காய்

நான்
உருகி
சுவடின்றி
காணாதாகிவிடுவேன்

இல்லை
மிஞ்சியிருப்பேன்

சில மணல் துகள்களில்
சில மணித் துளிகளுக்கு
நெடியாய்

அப்படித் தானே சொல்ல வேண்டும்