மீளாத் துளி

என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து
உனக்கென ஒரு சொல்
கொண்டு வந்தேன்

சொல்லின் மாயத்தில்
எனை மறந்து விட்டேன்

சொல்லி முடித்த பின் தான் கண்டேன்
கை தவறிய பரிசை

ஒரு நொடி முன்னால் எனில்
எனை நானே விழுங்கியிருப்பேன்

உன் கண்களில்
ஒரு நொடி
நான் இல்லாமலானேன்

துளித்துளியாய்

இன்னும் எத்தனை முறையோ
மீளாத் துளியின் முன்