லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ்-The Negro speaks of Rivers

I’ve known rivers:

I’ve known rivers ancient as the world and older than the flow of human blood in human veins.

My soul has grown deep like the rivers.

I bathed in the Euphrates when dawns were young.

I built my hut near the Congo and it lulled me to sleep.

I looked upon the Nile and raised the pyramids above it.

I heard the singing of the Mississippi when Abe Lincoln went down to New Orleans, and I’ve seen its muddy bosom turn all golden in the sunset.

I’ve known rivers:

Ancient, dusky rivers.

My soul has grown deep like the rivers.

-Langston Hughes

எனக்கு ஆறுகளைத் தெரியும்:

இவ்வுலகளவு பழமையானவை, மனித நரம்புகளில் ஓடும் மனிதக் குருதியை விட மூத்தவை

என் ஆன்மா ஆறுகளைப் போன்றே ஆழமானது

விடியல்கள் இளமையாய் இருந்தபோது யூஃபிரடிஸில் குளித்திருக்கிறேன்

தாலாட்டி தூங்கச்செய்த காங்கோவுக்கு அருகே குடில் அமைத்திருந்தேன்

நைலைப் பார்த்தபடி அதன் மீது பிரமிட்டுகளை எழுப்பினேன்

ஆப் லிங்கன் நியூ ஆர்லியன்ஸ் சென்ற போது பாடிய மிஸிஸிப்பியை அறிவேன்; அந்தியின் போது பொன்னென மின்னிய அதன் சேற்று மார்பையும்

எனக்கு ஆறுகளைத் தெரியும்

பழமையான மங்கலான ஆறுகளை

என் ஆன்மா ஆறுகள் அளவே ஆழமாகி விட்டது

எத்தனை powerful-ஆக இருக்கிறது இக்கவிதை. ஆறுகள் அளவே ஆழமாகவும், கம்பீரமாகவும். ‘Negro’ என்ற சொல்லை சம காலத்தில் உபயோகப்படுத்த முடியாது. அவர்கள் அடைந்ததும் அந்த மட்டில் தான் இருக்கிறது போல.

யூஃபிரடிஸ், காங்கோ, நைல் என ஆசிய, ஆப்பிரிக்க, எகிப்திய ஆறுகள் பேசப்படுகின்றன. ஆப்ரகாம் லிங்கன் பதவியடைந்த போது பாடியதாக அமெரிக்க நதியான மிஸ்ஸிஸிப்பி குறிக்கப்படுகிறது. ‘Father of rivers’ என்றழைக்கப்படுவது மிஸ்ஸிஸிபி. Native americans கொடுத்த பெயர் மிஸ்ஸிஸிப்பி, ‘the great river’ என்ற பொருளில். அதை விட பெரிய நதியான ‘Hudson’ குறிப்பிடப்படுவதில்லை. மிஸ்ஸிப்பியில் பயணிக்கும் போது எழுதப்பட்ட கவிதை என்பதாலும் இருக்கலாம். அதன் ‘சேறு’ நிறைந்த மார்பு ‘பொன்னொளி’ கொள்வதாகக் கூறப்படுகிறது. அதுவும் ஒரு குறியீடு தான், கவிதையில் வரும் விடியலையும் அந்தியையும் போல. ‘இவ்வுலகளவு பழமையானவை, மனித நரம்புகளில் ஓடும் மனிதக் குருதியை விட மூத்தவை’-மிக முக்கியமான வரியிது.

‘ஆப் லிங்கன்’ என்று சொல்வதில் தான் எத்தனை உரிமை, பிரியம். கடைசியில் தன் ஆன்மா எத்தனை ஆழமாக ஆகி விட்டது(grown deep) என்று சொல்லி முடிக்கிறார். முன்பே ஆழம் தான், இன்னும் ஆழமாகி விட்டது, அடக்குமுறைகளுக்கு பிறகும். அத்தனை ஆழம் இல்லையென்றால், இத்தனை அழுக்கை எப்படி சகித்துக் கொள்ள முடியும்.

லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் தன் பதினேழாவது வயதில் எழுதிய முதல் கவிதையிது. 1902-ல் அமெரிக்காவில் மிஸௌரியில் பிறந்த கருப்பினத்தவர் இவர். இந்தக் கவிதையும், “Mother to Son“, “Harlem” ஆகியவையும் ‘Anthems of black America’ வாக கருதப்படுகின்றன.