
Tonight I can write the saddest lines.-Pablo NerudaWrite, for example,’The night is shattered
and the blue stars shiver in the distance.’The night wind revolves in the sky and sings.
Tonight I can write the saddest lines.
I loved her, and sometimes she loved me too.Through nights like this one I held her in my arms
I kissed her again and again under the endless sky.She loved me sometimes, and I loved her too.
How could one not have loved her great still eyes.Tonight I can write the saddest lines.
To think that I do not have her. To feel that I have lost her.To hear the immense night, still more immense without her.
And the verse falls to the soul like dew to the pasture.What does it matter that my love could not keep her.
The night is shattered and she is not with me.This is all. In the distance someone is singing. In the distance.
My soul is not satisfied that it has lost her.My sight searches for her as though to go to her.
My heart looks for her, and she is not with me.The same night whitening the same trees.
We, of that time, are no longer the same.I no longer love her, that’s certain, but how I loved her.
My voice tried to find the wind to touch her hearing.Another’s. She will be another’s. Like my kisses before.
Her void. Her bright body. Her inifinite eyes.I no longer love her, that’s certain, but maybe I love her.
Love is so short, forgetting is so long.Because through nights like this one I held her in my arms
my soul is not satisfied that it has lost her.Though this be the last pain that she makes me suffer
and these the last verses that I write for her.
பாப்லோ நெருதா வின் இந்த வரிகளை வாசித்த போது, ஒரு தீவிர பிரிவாற்றாமையால் பீடிக்கப் பட்டேன். உண்மைக்கு மிக அருகில் இருக்கும் கவிதையிது என்று தோன்றியது. இந்தக் கவிதை என் மனதுக்கு மிக நெருக்கமாகி விட்டது.
இன்றைய இரவு நான் மிகச் சோகமான வரிகளை எழுதுவேன். உதாரணத்துக்கு, 'இந்த இரவு உடைந்து போயிருக்கிறது, தூரத்தில் நீல நக்ஷத்திரங்கள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன' என்று இரவுக் காற்று வானில் சுழன்று பாடிக் கொண்டிருக்கிறது இன்றைய இரவு நான் மிகச் சோகமான வரிகளை எழுதுவேன். நான் அவளைக் காதலித்தேன், சில நேரங்களில் அவளும் என்னை காதலித்தாள் இது போன்ற இரவுகளில் அவளை நான் அணைத்திருந்தேன் முடிவற்ற வானின் கீழ் மீண்டும் மீண்டும் அவளை முத்தமிட்டேன் அவள் என்னை எப்போதாவது காதலித்தாள், நானும் அவளை காதலித்தேன் அவளின் மகத்தான நிலை விழிகளை யாராவது காதலிக்காமல் இருக்க முடியுமா இன்றைய இரவு நான் மிகச் சோகமான வரிகளை எழுதுவேன். அவள் என்னுடன் இல்லை என நினைக்க, அவளை இழந்து விட்டேன் என உணர நீள் இரவை, அவளின் இன்மையால் இன்னும் நீளமாகிப் போன இரவைக் கேட்க. இவ்வரிகள் என் ஆன்மாவில் இறங்குகின்றன, புல்வெளியில் இறங்கும் பனித்துளியைப் போல எதனால் என்ன பயன், என் காதலால் அவளை இருத்திக் கொள்ள முடியவில்லை இரவு உடைந்துவிட்டது, அவள் என்னுடன் இல்லை அவ்வளவு தான், தொலைவில் யாரோ பாடுகிறார்கள், தொலைவில். என் ஆன்மாவுக்கு ஆறுதலில்லை, அவளை இழந்துவிட்டது என் விழி அவளைத் தேடுகிறது அவளிடம் செல்வதற்காக என் மனம் அவளை நாடுகிறது, அவள் என்னிடம் இல்லை அதே மரங்களை வெண்மையாக்கும் அதே இரவு தான் நாங்கள் தான் அதே போல் இல்லை நான் இப்போது அவளைக் காதலிக்கவில்லை, அது உறுதி, ஆனால் எப்படியெல்லாம் காதலித்தேன் என் குரல் காற்றைத் தேடியதே அவள் செவிகளை அடையத்தான் மற்றவருக்கானவள், அவள் மற்றவருக்கானவள், என் முத்தங்களைப் போல அவளின் வெற்றிடம், அவளின் ஒளி மிகுந்த உடல், அவளின் முடிவற்ற விழிகள் நான் அவளைக் காதலிக்கவில்லை, அது உறுதி, ஆனால் கொஞ்சம் காதலிக்கிறேன் போல காதல் எத்தனை சிறியது, மறப்பது தான் நெடியது ஏனெனில் இது போன்ற இரவுகளில் அவளை நான் அணைத்திருந்தேன் என் ஆன்மாவுக்கு ஆறுதலில்லை, அவளை இழந்துவிட்டது இதுவே அவளளிக்கும் கடைசி வலியாக இருந்தாலும் இதுவே அவளுக்கென நானெழுதும் கடைசி வரியாக இருந்தாலும்
‘உதாரணத்துக்கு’ என்று தொடங்கும் இடத்தில் ஒரு சுய எள்ளல் தெரிகிறது. கவிதை என்ற செயலைப் பற்றிய எள்ளலது. இருப்பினும் கவிஞர் தன் வலியைச் சொல்ல அதே கவிதையிடம் தான் அடைக்கலம் புகுகிறார்.
‘நான் அவளைக் காதலித்தேன், சில நேரங்களில் அவளும் என்னை காதலித்தாள்’; ‘அவள் என்னை எப்போதாவது காதலித்தாள், நானும் அவளை காதலித்தேன்’ – காதலின் தீவிரத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வு, இரண்டு முறை சொல்லப்படுகிறது. Love is a bitch, என்று சொல்லத் தோன்றுகிறது. எதிரொலியற்ற காதல், அல்லது குறைந்த எதிரொலி கொண்ட காதல், இதை விட கொடுமை வேறென்ன இருக்கிறது. கவிஞருக்கு தெரிந்திருக்கிறது-‘My love could not keep her’.
அதே மரங்களை வெண்மையாக்கும் அதே இரவு தான் நாங்கள் தான் அதே போல் இல்லை - சங்கப் பாடல் போல ஒலிக்கிறது அல்லவா?
‘நான் அவளைக் காதலிக்கவில்லை, அது உறுதி, ஆனால் கொஞ்சம் காதலிக்கிறேன் போல’- ஒரே வரியில் எத்தனை அலைக்கழிதல். தன்னிடம் தானே வேறு வழியின்றி காதலை ஒப்புக் கொள்ளும் இடம். கவிஞன் காதலிடம் தோற்கும் இடம்.
‘என் ஆன்மாவுக்கு ஆறுதலில்லை, அவளை இழந்துவிட்டது’- இப்படிச் சொல்லி யதார்த்தத்தை ஒப்புக் கொள்கிறார் கவிஞர். சம்மட்டியால் அடித்து கனவைக் கலைத்துக் கொள்வது கொடுமை தான்.
பாப்லோ நெருதாவின் ஏழு சிறந்த காதல் கவிதைகளில் ஒன்று இது. சிலி நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசை வென்ற லத்தீன் அமெரிக்கக் கவிஞர் பாப்லோ நெருதா. இக்கவிதையின் மூலம் ஸ்பானிஷ் மொழியைச் சேர்ந்தது. 1920-ல் வெளிவந்த Twenty Love Poems and a Song of Despair என்ற தொகுப்பில் இடம்பெற்ற கவிதையிது. இவரொரு அரசியலாளரும் கூட.