தெய்வம் மற்றும் காவல்

காலடியில் கிடக்கிறேன்
சென்னியிலேற்றி
அலைகிறேன்
தெய்வமென்றே தொழுகிறேன்
உன் முன்னால்
ஆயிரம் முறை
கழுத்தறுத்து விழுகிறேன்

முன்னும்
பின்னுமென
இரு பக்கமும்
கூரான கத்தி

முள் கிரீடம்

எப்பொழுதும் கொதிக்கும்
சுடுகலன்

சுய நலமி
ஒவ்வொரு முறையும் நீயே வெல்கிறாய்

ஆயினும்
போதை நீ

காலடியிலேயே கிடக்கிறேன்