அஷ்டபதி 4-சந்தன சர்ச்சித..

அநேக நாரீ பரிரம்ப ஸம்ப்ரம
ஸ்புரன் மனோஹாரி விலாஸ லாலஸம்
முராரிம் ஆராத் உபதர்ஸயந்தி அஸௌ
ஸகீ ஸமக்ஷம் புனராஹ ராதிகாம் 

அத்தோழி, மீண்டும் ராதையிடம், அநேக பெண்களைத் தழுவிக் கொள்வதில் உற்சாகமாக இருப்பவனும், உணர்வூட்டி மனதைத் திருடுபவனும், லீலை செய்வதில் ஆசைக் கொண்டவனும், அரக்கன் முரனின் எதிரியும், அருகிலும், கண்ணுக்கு எதிரிலும் இருப்பவனான கண்ணனைக் காண்பித்து சொல்கிறாள்- 

சந்தன சர்ச்சித நீல கலேவர பீத வசன வனமாலி
கேலி சலத் மணி குண்டல மண்டித கண்ட யுக ஸ்மித ஷாலி
ஹரி ரிஹ முக்த வதூ நிகரே
விலாசினி விலசதி கேலிபரே

எவன் நீல நிற உடலில் சந்தனப் பூச்சை பூசிக் கொண்டிருப்பவனோ, மஞ்சள் நிற பட்டாடையை உடுத்திக் கொண்டிருப்பவனோ, துளசியாலும் மலர்களாலுமான மாலையை அணிந்து கொண்டிருப்பவனோ, அசையும் போது ஆடும் காதுக் குழைகளால் அலங்கரிக்கப்பட்ட கன்னங்களிரண்டுடையவனோ, புன்னகைத்துக் கொண்டே இருப்பவனோ அந்தக் 

கண்ணன்(ஹரி) பேரழகும் நாணமும் கொண்ட மடந்தைகள் நடுவே கிரீடை செய்து கொண்டிருக்கிறான்.

பீன பயோதர பார பரேண ஹரிம் பரிரப்ய ஸராகம்
கோபவதூ ரனுகாயதி காசித் உதஞ்சித பஞ்சம ராகம்
(ஹரி ரிஹ...கேலி பரே)

ஒரு கோபிகை தன் ஸ்தனபாரத்தால் முழுவதாகக் கண்ணனை ஆலிங்கனம் செய்து கொண்டிருக்கிறாள். மற்றொரு கோபிகையோ பஞ்சம ஸ்தாயியில்(உச்ச ஸ்தாயியில்) அவன் குழலோடு சேர்ந்து பாடுகிறாள்(ஹரி..)

காபி விலாச விலோல விலோசன கேலன ஜனித மனோஜம்
த்யாயதி முக்த வதூ ரதிகம் - மதுசூதன வதன சரோஜம்!
(ஹரி ரிஹ...கேலி பரே)

ஒரு மடந்தையோ, சுழலும் அகன்ற கண்களால் மது சூதனின் அழகிய தாமரைப் போன்ற முகத்தைப் பார்த்ததும், மன்மதனால் தோற்றுவிக்கப்பட்ட உணர்வினால், அதையே தியானித்துக் கொண்டிருக்கிறாள்.

காபி கபோலதலே மிளிதா லபிதும் கிமபிஸ்ருதிமூலே
சாரு சுசும்ப நிதம்பவதி தயிதம் புலகைரனுகூலே
(ஹரி ரிஹ...கேலி பரே)

ஒரு நிதம்பவதி(பின்னழகு கொண்டவள்) அவன் காதில்(ஸ்ருதிமூலே) ஏதோ சொல்ல முயல்கிறாள். அவளுக்கு வாகாக அவன் தன் கன்னத்தைக் காட்ட, அவள் புல்லரித்து(புலகை) அவனை நன்றாக முத்துகிறாள்(சுசும்ப)

கேளிகலா குதுகேன ச காசித் அமும் யமுனா ஜலகூலே
மஞ்ஜூள வஞ்ஜூள குஞ்ஜகதம் விசகர்ஷ கரேணதுகூலே
(ஹரி ரிஹ...கேலி பரே)

ஒரு கோபிகை யமுனையின் நீரிலும் கரையிலும் விளையாட உற்சாகத்துடன் (குதுகேன) அழகிய அசோக மரக் குடிலுக்கு சென்ற (வஞ்சுள குஞ்ச கதம்) அவனை(அமும்) அவன் ஆடையைக் கையால் பற்றி இழுத்துக் கொண்டு செல்கிறாள்.

கரதல தாள தரள வலயாவலி கலிதகலஸ்வன வம்சே
ராஸ ரஸே ஸஹ ந்ருத்யபரா ஹரிணா யுவதி ப்ரஸஸம்ஸே
(ஹரி ரிஹ...கேலி பரே)

ராஸக் கிரீடையில் கண்ணனோடு ஆடிக் கொண்டிருக்கும் ஒரு யுவதி அவனின் 'வம்சி' என்னும் குழலின் இசைக்கேற்ப தன் கைகளால் தாளமிட, அவள் கைகளில் அணிந்த வளையல் வரிசையின்(வலயாவலி) ஒலியும் தக்கபடி ஒலியெழுப்ப, ஹரியால் அவள் புகழப் படுகிறாள்.

ஸ்லிஷ்யதி காமபி சும்பதி காமபி காமபி ரம்யதி ராமம்
பஷ்யதி சஸ்மித சாருதராம் அப ராமனு கச்சதி வாமம்!
(ஹரி ரிஹ...கேலி பரே)

அவன் ஒருத்தியை ஆலிங்கனம் செய்து கொள்கிறான், ஒருத்தியை முத்தமிடுகிறான். ஒரு அழகிய கோபிகைக்கு ஆனந்தம் அளிக்கிறான், பின்னர் இடது புறத்தில் இருக்கும்(வாமம்) அழகிய புன்னகை கொண்ட(ஸ்மித சாருதராம்) மற்றொருவளைத்   ( அபராம்) தொடர்ந்து செல்கிறான்(அனு கச்சதி)

ஸ்ரீ ஜயதேவ பணிதமிதம் அத்புத கேஸவ கேளி ரஹஸ்யம்
ப்ருந்தாவன விபினே சரிதம் விதனோது ஸுபானி யஸஸ்யம்

ஸ்ரீ ஜயதேவரால் சொல்லப்பட்ட, பிருந்தாவனக் காட்டில் நடந்த இந்த அற்புதமான கேசவனின் கிரீடை இரகசியம், புகழையும் சுபத்தையும் அளிக்கட்டும்.

மற்றொரு விதமாக செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு கீழே: