
ह्रीङ्कारी Hrimkari ஹ்ரீம் என்னும் மந்திரத்தின் உருவானவள்
ह्रीमती hrimati பணிவு கொண்டவள்
हृद्या hrudya இருதயத்தில் வாசம் செய்பவள்
हेयोपादेयवर्जिता heyopadeyavarjita எதையும் கொள்ளவோ மறுக்கவோ செய்யாதவள்
राजराजार्चिता Rajarajarchita அரசர்களின் அரசனால் அர்ச்சிக்கப் படுபவள்
राज्ञी ragni அரசர்களின் அரசனான சிவனின் ராணி
रम्या ramya ரம்யமானவள்(இனிமையானவள்)
राजीवलोचना rajivalochana தாமரையைப் போன்ற கண்களுடையவள்
रञ्जनी Ranjani மனதிற்கு ஆனந்தம் அளிப்பவள்
रमणी ramani மகிழ்ச்சி அளிப்பவள்
रस्या rasya அனைத்திலும் சுவையாய் இருப்பவள்(சுவைக்கப் படுபவள்)
रणत्किङ्किणिमेखला ranatkinkini mekhala சப்தமெழுப்பும் மணிகளாலான மேகலையை அணிந்தவள்
रमा Rama ரமா (லக்ஷ்மியாய் ஆனவள்)
राकेन्दुवदना rakenduvadana முழு நிலவைப் போன்ற அழகிய முகம் கொண்டவள்
रतिरूपा ratirupa மன்மதனின் பத்னியான ரதியின் உருவானவள்
रतिप्रिया ratipriya ரதியிடம் பிரியமானவள்(ரதிக்கு பிரியமானவள்)
रक्षाकरी Rakshakari காப்பவள்
राक्षसघ्नी rakshasaghni ராக்ஷசர்களை அழிப்பவள்
रामा rama ரமிக்கப்படுபவள்(மனத்திற்கு இனியவள்)
रमणलम्पटा ramanalampata தன் மனதிற்கரசனாகிய சிவனின் உருவாய் இருப்பவள்
काम्या Kamya விரும்பப் படுபவள்
कामकलारूपा kamakalarupa காமகலாவின் உருவத்தில் இருப்பவள்
कदम्बकुसुमप्रिया kadamba kusumapriya கடம்ப மலர்களின் மீது விருப்பம் கொண்டவள்
कल्याणी Kalyani மங்கலம் தருபவள்
जगतीकन्दा jagatikanda உலகத்துக்கு ஆணிவேராய் திகழ்பவள்
करुणारससागरा karunarasasagara கருணைக் கடலானவள்
कलावती Kalavati கலைகளே உருவானவள்
कलालापा kalalapa இனிமையான இசையைப் போன்று பேசுபவள்
कान्ता kanta அழகானவள்
कादम्बरीप्रिया kadambari priya காதம்பரி என்ற மதுவை விரும்புபவள்
वरदा Varada வரங்களை அளிப்பவள்
वामनयना vamanayana அழகிய கண்களை உடையவள்
वारुणी मदविव्हला varunimadavihvala வாருணி என்ற மதுவினால் மயக்கம் கொள்பவள்
विश्वाधिका Vishvadhika பிரபஞ்சத்தையும் மிஞ்சுபவள்
वेदवेद्या vedavedya வேதங்களினால் அறியப் படுபவள்
विन्ध्याचलनिवासिनी vindhyachala nivasini விந்திய மலையில் வாழ்பவள்
विधात्री Vidhatri பிரபஞ்சத்தை ஆக்கிக் காப்பவள்
वेदजननी vedajanani வேதத்தை பிறப்பிப்பவள்
विष्णुमाया vishnu maya விஷ்ணுவின் மாயா சக்தியானவள்
विलासिनी vilasini விளையாட்டு குணம் கொண்டவள்
क्षेत्रस्वरूपा Kshetra-svarupa உடலே உருவானவள்(க்ஷேத்ர என்பதற்கு உடல் என ஒரு பொருளுண்டு)
क्षेत्रेशी kshetreshi உடலின் ஈசனான சிவனின் மனைவி
क्षेत्रक्षेत्रज्ञपालिनी kshetrakshetragynapalini உடலையும் உடலை அறியும் ஆன்மாவையும் காப்பவள்
क्षयवृद्धिविनिर्मुक्ता Kshaya-vrudhi vinirmukta குறைவதோ வளர்வதோ அற்றவள்
क्षेत्रपालसमर्चिता kshetrapala samarchita உடலைக் காக்கும் க்ஷேத்ரபாலனான சிவனால் அர்ச்சிக்கப் படுபவள்
विजया Vijaya எப்போதும் வெற்றியே பெறுபவள்
विमला vimala அழுக்கற்றவள்
वन्द्या vandya வழிபடத் தகுதியானவள்
वन्दारुजनवत्सला vandaru janavatsala தன்னை வழிபடுபவரிடம் தாயைப் போல அன்பு செய்பவள்
वाग्वादिनी Vagvadini வாக்வாதினி என்ற மந்திரத்தின் உருவமானவள்(சொற்களை விவாதத்தில் நன்றாக உபயோகிப்பவள்)
वामकेशी vamakeshi அழகிய கூந்தலை உடையவள்
वह्निमण्डलवासिनी vahni mandala vasini அக்னி மண்டலத்தில் வசிப்பவள்
भक्तिमत्कल्पलतिका Bhaktimatkalpalatika பக்தர்களுக்கு கற்பகக் கொடியைப் போன்றவள்
पशुपाशविमोचिनी pashupasha vimochani உயிர்களை பந்தத்திலிருந்து விடுவிப்பவள்
संहृताशेषपाषण्डा Samhruta sheshapashanda பாஷாண்டிகளை(மத வெறியர்களை) அழிப்பவள்
सदाचारप्रवर्तिका sadachara pravartika நன்னடத்தையை பழகச் செய்பவள்
तापत्रयाग्निसन्तप्तसमाह्लादनचन्द्रिका Tapatrayagni santapta samahladana chandrika தாபமெனும் முவ்வெரியால் எரிக்கப்படுபவருக்கு நிலவின் கிரணங்களைப் போல சமாதானம் அளிப்பவள்.
तरुणी Taruni எப்போதும் இளமையானவள்
तापसाराध्या tapasaradhya தபஸ்விகளால் ஆராதிக்கப் படுபவள்
तनुमध्या tanumadhya மெல்லிடையாள்
तमोऽपहा tamo-paha தமோ குணத்தால் வரும் மடமையை அழிப்பவள்
चित् (चितिः) Chiti சுத்த சித்தமாக இருப்பவள்
तत्पदलक्ष्यार्था tatpadalakshyartha 'தத்' என்னும் வார்த்தையின் இலக்கிய அர்த்தமானவள்
चिदेकरसरूपिणी chidekarasa rupini சுத்த ஞானத்தின் ரூபமானவள்
स्वात्मानन्दलवीभूतब्रह्माद्यानन्दसन्ततिः Svatmanandalavibhuta bramhadyananda santatih தன் ஆத்மானந்தக் கடலில் பிரம்மத்தைப் பற்றிய ஞானத்தை ஒரு அலையாக உணரச் செய்பவள்
परा Para அனைத்தையும் கடந்தவள்
प्रत्यक्चितीरूपा pratyakchitirupa தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத பிரம்மத்தின் உருவைக் கொண்டவள்
पश्यन्ती pashyanti சுவாதிஷ்டானச் சக்ரத்தில் பரா வுக்கு அடுத்ததான ஒலியாய் இருப்பவள்
परदेवता paradevata அனைவருக்கும் தலைவியான தேவி (பராசக்தி)
मध्यमा Madhyama அனைத்திற்கும் மத்தியில் இருப்பவள்
वैखरीरूपा vaikharirupa வைகரியின் ரூபத்தில் இருப்பவள்(வைகரி-கேட்கும் நிலையில் உள்ள ஒலி)
भक्तमानसहंसिका bhaktamanasa hamsika பக்தர்களின் மனதில் நீந்தும் அன்னப்பறவையானவள்
कामेश्वरप्राणनाडी Kameshvara prananadi காமேஸ்வரனின் உயிர் நாடியாயிருப்பவள்
कृतज्ञा krutagna செய்யப்படுபவை அனைத்தையும் அறிபவள்
कामपूजिता kamapujita காமனால் பூஜிக்கப் படுபவள்
शृङ्गाररससम्पूर्णा Shrungararasa sampurna சிருங்கார ரசத்தால் நிரம்பியவள்
जया jaya எங்கும் எப்போதும் வெல்பவள்
जालन्धरस्थिता jalandharasdhita ஜாலந்தர பீடத்தில் அமர்பவள்
ओड्याणपीठनिलया Odyana pita nilaya ஓட்யாண பீடத்தில்(அஞ்ஞா சக்ரத்தில்) அமர்பவள்
बिन्दुमण्डलवासिनी bindu mandala vasini பிந்து மண்டலத்தில்(ஸ்ரீ சக்ரத்தில்) அமர்பவள்
रहोयागक्रमाराध्या Rahoyaga kramaradhya இரகசியமான யாக விதிகளால் ஆராதிக்கப் படுபவள்
रहस्तर्पणतर्पिता rahastarpana tarpita இரகசிய வழிபாடுகளால் திருப்தி படுத்தப் பட வேண்டியவள்
सद्यःप्रसादिनी Sadyah prasadini அந்நொடியில் அளிப்பவள்
विश्वसाक्षिणी vishvasakshini உலகத்துக்கே சாக்ஷியானவள்
साक्षिवर्जिता sakshivarjita சாக்ஷிகளில்லாதவள்
षडङ्गदेवतायुक्ता Shadanga devata yukta ஆறு அங்கங்களுக்கு உரிய தேவதைகளால் சூழப்பட்டவள்
षाड्गुण्यपरिपूरिता shadgunya paripurita ஆறு குணங்களும் பரிபூர்ணமாக அமைந்தவள்
नित्यक्लिन्ना Nityaklinna எப்போதும் கருணையால் நிறைந்தவள்
निरुपमा nirupama உவமை இல்லாதவள்
निर्वाण सुखदायिनी nirvana sukhadayini முக்தி என்னும் சுகத்தை அளிப்பவள்
नित्या-षोडशिकारूपा Nitya shodashika rupa பதினாறு தேவதைகளின் உருவத்தில் இருப்பவள்(காமேஸ்வரி, பகமாலினி, நித்யக்லின்னா, பேருண்டா, வஹ்னிவாசினி, மஹாவஜ்ரேஸ்வரி, சிவதூதி, த்வரிதா, குலசுந்தரி, நித்யா, நீலபதாகினி, விஜயா, சர்வமங்களா, ஜ்வாலாமாலினி, சித்ரா and த்ரிபுரசுந்தரி)
श्रीकण्ठार्धशरीरिणी shree kantardha sharirini ஸ்ரீகண்டனின்(சிவனின்) பாதி தேகமாயிருப்பவள்
प्रभावती Prabhavati ஒளியால் ஆனவள்
प्रभारूपा prabha rupa ஒளியே உருவானவள்
प्रसिद्धा prasidha கொண்டாடப் படுபவள்
परमेश्वरी parameshwari பரமேஸ்வரி
मूलप्रकृतिः Mulaprakruti பிரபஞ்சத்துக்கு மூலமாய் விளங்குபவள்
अव्यक्ता avyakta தன்னை வெளிப் படுத்திக் கொள்ளாதவள்
व्यक्ताव्यक्तस्वरूपीणि vyaktavyakta svarupini தன்னை வெளிப்படுத்தியும் வெளிப்படுத்தாமலும் இருப்பவள்
व्यापिनी Vyapini எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவள்