
குட்டிப் பாம்பின் சின்னத் தலை
மெல்ல எட்டிப் பார்த்தது
“உண்டா.. இல்லையா..”
“சீ..போ..சனியனே..”
சட்டெனத் தலையை
உள்ளிழுத்துக் கொண்டது
மீண்டும் எட்டிப் பார்த்தது
கொம்பு எடுத்துக் கொண்டேன்
தப்பித்தேன்
வளைக்குள் பாம்பு
நன்கு பெருத்து விட்டது
கண்ணயரும் வேளையில்
மீண்டும் எட்டிப் பார்த்தது
“உண்டு தான் போல..”
“ம்ம்ம்..” என்கிறேன்