
श्रीमाता Sree-mata மங்கலம் பொலியும்/தரும் அன்னை
श्रीमहाराज्ञी shree maha-ragni மங்கலம் பொலியும்/தரும் மஹாராணி
श्रीमत्सिंहासनेश्वरी shreematsimha-saneshvaree மங்கலம் பொலியும் அரியாசனத்தில் அமர்ந்த அரசி
चिदग्निकुण्डसम्भूता Chidagni kunda-sanbhuta சித்தமெனும் எரி குளத்தில் தோன்றியவள்
देवकार्यसमुद्यता deva-karya samudyata தேவர்களுக்கு வரம் தர விருப்பம் கொண்டவள்
उद्यद्भानुसहस्राभा Udyadbanu saha-srabha ஆயிரம் உதயசூரியன்களின் ஒளி கொண்டவள்
चतुर्बाहुसमन्विता chatur-bahu saman-vita நான்கு கைகளை உடையவள்
रागस्वरूपपाशाढ्या Raga-svarupa pashadya பாசக்கயிற்றை கைகளில் தாங்கியவள்
क्रोधाकाराङ्कुशोज्ज्वला krodha-karanku-shojvala குரோதம் தரும் அங்குசத்தால் ஜொலிப்பவள்
मनोरूपेक्षुकोदण्डा Mano-rupekshu kodanda மனமென்னும் கரும்பு வில்லைத் தாங்கியுள்ளவள்
पञ्चतन्मात्रसायका pancha tanmatra sayaka ஐந்து சூக்ஷ்மப் பொறிகளை அம்புகளாகக் கொண்டவள்
निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला Nijaruna prabha-pura majabhramhanda mandala தன் சிவந்த சுடரொளியினால் முழு பிரபஞ்சத்தையும் முழுக்காட்டுபவள்
चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा Chanpaka shoka punnaga saogandhika lasatkacha செண்பக, அசோக, புன்னை, சௌகந்திக மலர்களை தன் தலைமுடியில் சூடியவள்
कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता Kuruvinda mani shrenee kanatkotira mandita குருவிந்தம் என்னும் மணிகளின் வரிசையால் அலங்கரிக்கப்பட்ட மகுடத்தால் பொலிபவள்
अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता Ashtami chandra vibhraja dalikasdhala shobhita எட்டாம் நிலவைப் போனறு ஒளிரும் நெற்றியைக் கொண்டவள்
मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका Mukha-chandra kalankabha mruga-nabhi visheshaka நிலவில் இருக்கும் கறையைப் போன்று நெற்றியில் புனுகைத் திலகமாக அணிந்தவள்
वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका Vadanas-mara mangalya gruhatorana chillika காமனின் இல்லமே உன் முகமென்றால் அதன் தோரண வாயிலே உன் புருவங்கள்
वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना Vaktra-lakshmi pari-vaha chalan-minabha lochana முகத்திலிருந்து பாயும் அழகு எனும் நதியில் நீந்தும் ஒளிமிக்க மீன்களே கண்களாகக் கொண்டவள்
नवचम्पकपुष्पाभनासादण्डविराजिता Nava-chanpaka pushpabha nasa-danda virajita புதிய செண்பக மலரின் மொட்டு போன்ற நாசியால் ஜொலிப்பவள்
ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा Tarakanti tiraskari nasa-bharana bhasura நட்சத்திரங்களின் ஒளியை பழிக்கும் மூக்குத்தியை அணிந்தவள்
कदम्बमञ्जरीक्लृप्तकर्णपूरमनोहरा Kadanba manjari klupta karna-pura mano-hara கடம்ப மலர் கொத்துகளை காதணியாய் அணிந்ததால் மனதை வசீகரிப்பவள்
ताटङ्कयुगलीभूततपनोडुपमण्डला Tatanka yugali-bhuta tapa-nodupa mandala சூர்ய சந்திரர்களை தாடங்க இணையாக அணிந்திருப்பவள்
पद्मरागशिलादर्शपरिभाविकपोलभूः Padma-raga shila-darsha pari-bhavi kapolabhuh பத்மராக கற்களால் செய்த ஆடியின் ஒளியை மிஞ்சும் கன்ன ஒளியைக் கொண்டவள்
नवविद्रुमबिम्बश्रीन्यक्कारिरदनच्छदा Nava-vidruma binbashree nyakkari radanachada புதிதாய் வெட்டப்பட்ட பவளத்தின், கோவைக் கனியின் ஒளியை மிஞ்சும் ஒளி கொண்ட அதரங்களைக் கொண்டவள்
शुद्धविद्याङ्कुराकारद्विजपङ्क्तिद्वयोज्ज्वला Shudha vidyankurakara dvijapankti dvayojvala சுத்த ஞான அரும்புகளைப் போல ஜ்வலிக்கும் பல்வரிசைகளைக் கொண்டவள்
कर्पूरवीटिकामोदसमाकर्षिदिगन्तरा Karpura-vitikamoda samakarsha digantara எல்லா திசைகளிலிருந்தும் அனைவரையும் தன் வாசனையால் ஆகர்ஷிக்கும் கற்பூர வெற்றிலைச் சுருளை சுவைப்பவள்
निजसल्लापमाधुर्यविनिर्भर्त्सितकच्छपी Nijasanlapa madhurya vinirbhastitakachapi தன் மொழியின் இனிமையால் சரஸ்வதியின் வீணையையும் தோற்கடிப்பவள்
मन्दस्मितप्रभापूरमज्जत्कामेशमानसा Mandasmita prabhapura majatkamesha manasa தன் மென்னகையின் ஒளியால் காமேசனின் மனதையும் மூழ்கடிப்பவள்
अनाकलितसादृश्यचिबुकश्रीविराजिता Anakalita sadrusya chubuka shree virajita எதனோடும் ஒப்பிடமுடியாத அழகிய முகவாயைக் கொண்டவள்
कामेशबद्धमाङ्गल्यसूत्रशोभितकन्धरा Kamesha bada mangalya sutra-shobhita kandhara காமேசனால் கட்டப்பட்ட மங்கல நாணினால் அலங்கரிக்கப்பட்ட கழுத்தை உடையவள்
कनकाङ्गदकेयूरकमनीयभुजान्विता Kanakangada keyura kamaniya bhujanvita பொன்னால் செய்யப்பட்ட கேயூரங்களால் அழகாக் அலங்கரிக்கப்பட்ட புஜங்களை உடையவள் रत्नग्रैवेयचिन्ताकलोलमुक्ताफलान्विता Ratnagrai-veya chintakalola mukta phalanvita இரத்தினங்கள் பதிக்கப்பட்டதும் முத்துக்கள் தொங்கும் மாலையினால் ஜொலிக்கும் கழுத்தை உடையவள்
कामेश्वरप्रेमरत्नमणिप्रतिपणस्तनी Kameshvara prema-ratna mani prati-panastani காமேஸ்வரன் அளிக்கும் பிரேமம் என்னும் இரத்தினத்துக்கு பரிசாய் தன் ஸ்தனங்களை அளிப்பவள்
नाभ्यालवालरोमालिलताफलकुचद्वयी Nabhyalavala romali lata phala kuchadvaei உந்திச் சுழியிலிருந்து மேலேறும் மெல்லிய மயிர்க்கொடியில் பழுத்த பழங்களான் ஸ்தனங்களை உடையவள்
लक्ष्यरोमलताधारतासमुन्नेयमध्यमा Lakshya romalata dharata samunneya madhyama மயிர்க்கொடி தொடங்குவதால் தான் கண்ணுக்கே தெரியும் இடையைக் கொண்டவள்
स्तनभारदलन्मध्यपट्टबन्धवलित्रया Stana-bhara dalanmadhya patta-bandha-valitraya ஸ்தனபாரத்தில் இடை உடைந்து விடாதிருக்க மூன்று மடிப்புகள் கொண்ட இடையை உடையவள்
अरुणारुणकौसुम्भवस्त्रभास्वत्कटीतटी Arunaruna kaosumbha vastra bhasvatkatitati குங்குமப்பூவின் வண்ணத்தில் தோய்ந்த உதிக்கும் சூரியனின் சிவப்பை ஒத்த இடையாடையை அணிந்தவள்
रत्नकिङ्किणिकारम्यरशनादामभूषिता Ratna kinkinikaramya rashanadama bhushita இரத்தினங்கள் பதிக்கப்பட்ட மணிகளால் அலங்கரிக்கப்பட்ட ஒட்டியாணத்தை அணிந்தவள்
कामेशज्ञातसौभाग्यमार्दवोरुद्वयान्विता Kamesha-gynata saobhagya marda-voru dvayanvita காமேசனுக்கு மட்டுமே தெரியும் சௌபாக்கியத்தைக் கொண்ட மென்மையான் இரு தொடைகளைக் கொண்டவள்
माणिक्यमकुटाकारजानुद्वयविराजिता Manikya makuta kara janudvaya virajita மாணிக்கத்தால் செய்யப்பட்ட மகுடங்களைப் போன்ற இரண்டு முட்டிகளை உடையவள்
इन्द्रगोपपरिक्षिप्तस्मरतूणाभजङ्घिका Indra-gopa parikshipta smaratunabha janghika ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மன்மதனின் அம்புறாத்தூணியைப் போல் உள்ள கெண்டைக் கால்களைக் கொண்டவள்
गूढगुल्फा Guda-gulpha மறைந்திருக்கும் கணுக்கால்களை உடையவள்
कूर्मपृष्ठजयिष्णुप्रपदान्विता kurma prushtajaeishnu prapadanvita வளைவிலும் மென்மையிலும் ஆமையின் அடிப்பகுதியை போன்ற பாதங்களைக் கொண்டவள்
नखदीधितिसंछन्ननमज्जनतमोगुणा Nakhadidhiti sanchanna namajana tamoguna தன்னை நமஸ்கரிப்பவரின் அறியாமை இருளை முற்றிலும் போக்கும் ஒளி கொண்ட நகங்களைக் கொண்டவள்
पदद्वयप्रभाजालपराकृतसरोरुहा Padadvaya prabhajala parakruta saroruha தாமரைகளைத் தோற்கடிக்கும் ஒளி கொண்ட பாதங்களைக் கொண்டவள்
शिञ्जानमणिमञ्जिरमण्डितश्रीपदाम्बुजा Shinjanamani manjira mandita shripadambuja மணிகள் பதித்த சிணுங்கும் தங்கக் கொலுசால் அல்ங்கரிக்கப்பட்ட் மங்கலமான பாதபத்மங்களை உடையவள்
मरालीमन्दगमना Marali mandagamana அன்னத்தை ஒத்த தளர்ந்த மென்னடை கொண்டவள்
महालावण्यशेवधिः maha-lavanya shevadhih பேரழுகுப் பெட்டகமானவள்
सर्वारुणा Sarvaruna முழுமையாகச் சிவந்தவள்
अनवद्याङ्गी anavadyangi பூஜிக்கத் தகுந்த அங்கங்களை உடையவள்
सर्वाभरणभूषिता sarvabharana bhushita எல்லா ஆபரணங்களையும் அணிந்தவள்
शिवकामेश्वराङ्कस्था Shiva-kameshvarankasdha காமத்தை வென்ற சிவனின் மடி மீது அமர்ந்தவள்
शिवा shiva மங்களம் தருபவள் (மங்கலை)
स्वाधीनवल्लभा svadhinavallabha தன் ஆளுகைக்குக் கீழ் உள்ள கணவனை உடையவள்
सुमेरुमध्यशृङ्गस्था Sumeru madhya srngastha ஸுமேரு மலையின் நடு முடியில் இருப்பவள்
श्रीमन्नगरनायिका shreemannagara nayika மங்கலம் நிறைந்த நகரத்தின் நாயகி
चिन्तामणिगृहान्तस्था Chintamani gruhantahsthaa சிந்தாமணி என்னும் மணியால் கட்டப்பட்ட இல்லத்தில் வசிப்பவள்
पञ्चब्रह्मासनस्थिता pancha bramhaa sanasthita ஐந்து பிரம்மாக்களால் ஆன ஆசனத்தில் அமர்பவள்
महापद्माटवीसंस्था Mahapadmatavi sanstha மஹா பத்மக் காட்டில் வசிப்பவள்
कदम्बवनवासिनी kadamba vanavasinee கடம்ப வனத்தில் வாழ்பவள்
सुधासागरमध्यस्था Sudha sagara madhyasthaa தேன் ஆழியின் நடுவில் வசிப்பவள்
कामाक्षी kamakshi காமமூட்டும் கண்களை உடையவள் (அழகிய கண்களை உடையவள்)
कामदायिनी kamadayini காமத்தை அருள்பவள்
देवर्षिगणसङ्घातस्तूयमानात्मवैभवा Devarshigana sanghata stuyamanatma-vaibhava தேவ மற்றும் ரிஷி கணங்களால் ஸ்துதிக்கப்படத் தகுதியான வைபவத்தை உடையவள்
भण्डासुरवधोद्युक्तशक्तिसेनासमन्विता Bhandasura vadhodyukta-shakti-sena samanvita பண்டாசுரனை வதைக்க வல்ல சக்திகளின் படையைக் கொண்டவள்
सम्पत्करीसमारूढसिन्धुरव्रजसेविता Sampatkari samaruda sindhura vrajasevita 'சம்பத்கரி'யால் திறமையாக நடத்தப்படும் யானைப்படையால் சேவை செய்யப் படுபவள் अश्वारूढाधिष्ठिताश्वकोटिकोटिभिरावृता' Asvarudadhishtitasva koti koti bhiravruta அஷ்வாரூடை'யினால் நடத்தப்படும் கோடி கோடியான குதிரைப் படைகளால் சூழப்பட்டவள் चक्रराजरथारूढसर्वायुधपरिष्कृता Chakra-raja ratharudha sarva-yudha parishkruta அனைத்து ஆயுதங்களும் கொண்ட சக்ர ராஜத் தேரில் ஏறி அமர்ந்து ஜொலிப்பவள்
गेयचक्ररथारूढमन्त्रिणीपरिसेविता Geya-chakra ratha-ruda mantrini parisevita கேயசக்ரத் தேரில் அமர்ந்த 'மந்த்ரிணி'யால் சேவிக்கப்படுபவள்
किरिचक्ररथारूढदण्डनाथापुरस्कृता Kiri-chakra ratha-rudha dandanadha puraskruta கிரிசக்ரத் தேரில் அமர்ந்த 'தண்டநாதை'யால் காக்கப்படுபவள்
ज्वालामालिनिकाक्षिप्तवह्निप्राकारमध्यगा Jvalamalinikakshipta vahni prakara madhyaga 'ஜ்வலாமாலினி'யால் உண்டாக்கப்பட்ட அக்னிக் கோட்டையின் மத்தியில் அமர்ந்திருப்பவளே
भण्डसैन्यवधोद्युक्तशक्तिविक्रमहर्षिता Bhandasainya vadhodyukta shakti vikrama harshita பண்டனின் சேனையை வதைப்பதில் தீவிரமாக இருக்கும் சக்திகளின் வல்லமையால் மகிழ்பவளே
नित्यापराक्रमाटोपनिरीक्षणसमुत्सुका Nitya parakra matopa nireekshana samutsaka 'நித்யை'களின் வல்லமையை கர்வத்தைக் கண்டு உற்சாகம் கொள்பவளே
भण्डपुत्रवधोद्युक्तबालाविक्रमनन्दिता Bhanda-putra vadhodyukta balavikrama nandita பண்டனின் மகனைக் கொல்வதில் குறியாய் இருக்கும் 'பாலா'வின் வல்லமையைக் கண்டு மகிழ்பவளே
मन्त्रिण्यम्बाविरचितविषङ्गवधतोषिता Mantrinyanba virachita vishangavadhatoshita மந்த்ரிணி அம்பையால் நிகழ்த்தப்பட்ட விசங்கனின் வதத்தால் மகிழ்பவளே
विशुक्रप्राणहरणवाराहीवीर्यनन्दिता Vishukra pranaharana varahi viryanandita விசுக்ரனின் உயிரை மாய்த்த வாராஹியின் வீரத்தால் ஆனந்தம் கொள்பவளே
कामेश्वरमुखालोककल्पितश्रीगणेश्वरा Kameshvara mukhaloka kalpita shreganeshvara காமேஸ்வரனின் முகத்தைப் பார்த்த பார்வையால் கணேஸ்வரனைப் படைத்தவளே
महागणेशनिर्भिन्नविघ्नयन्त्रप्रहर्षिता Maha-ganesha nirbhinna vighnayantra praharshita மஹா கணேசர் தகர்த்த விக்னங்களால் ஆனந்திப்பவள்
भण्डासुरेन्द्रनिर्मुक्तशस्त्रप्रत्यस्त्रवर्षिणी Bhanda-surendra nirmukta shastra pratyastra varshini பண்டாசுரனால் விடுக்கப்பட்ட அனைத்து அஸ்திரங்களுக்கும் பதில் அஸ்திரங்களை வர்ஷிப்பவளே
कराङ्गुलिनखोत्पन्ननारायणदशाकृतिः Karanguli nakhotpanna narayana dashakrutih தன் பத்து விரல் நகங்களில் இருந்து நாராயணனின் பத்து அவதாரங்களைப் படைத்தவளே
महापाशुपतास्त्राग्निनिर्दग्धासुरसैनिका Mahapashupatastragni nirdagdha surasainika மகா பாசுபதம் என்னும் அஸ்திர்த்தின் அக்னியால் அசுர சேனைகளை எரித்தவள்
कामेश्वरास्त्रनिर्दग्धसभण्डासुरशून्यका Kameshvarastra nirdagda sabhandasura shunyaka காமேஸ்வர அஸ்திரத்தால் பண்டாசுரனையும் அவன் தலைநகர் சூன்யகத்தையும் எரித்தழித்தவளே
ब्रह्मोपेन्द्रमहेन्द्रादिदेवसंस्तुतवैभवा Bramhopendra mahendradi devasamsthutavaibhava பிரம்மன், உபேந்திரன்(விஷ்ணு), மகேந்திரன் முதலிய தேவர்களால் ஸ்துதிக்கப்படும் வைபவத்தை உடையவளே
हरनेत्राग्निसन्दग्धकामसञ्जीवनौषधिः Haranetragni sandagdakama sanjivanaoshadhih சிவனின் நெற்றிக்கண்ணால் எரிந்த மன்மதனை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி ஔஷதமாய் ஆனவளே
श्रीमद्वाग्भवकूटैकस्वरूपमुखपङ्कजा Shreemadvagbhavakutaika svarupa mukhapankaja மங்களகரமான 'வாக்பவகூட'த்தையே தன் தாமரை முகமாகக் கொண்டவள்
कण्ठाधःकटिपर्यन्तमध्यकूटस्वरूपिणी Kantadhah-kati paryanta madhyakuta svarupinee கழுத்திலிருந்து இடை வரை 'மத்யகூட'த்தின் உருவமாக இருப்பவள்
शक्तिकूटैकतापन्नकट्यधोभागधारिणी Shakti-kutaikatapanna katyadhobhaga dharinee இடைக்குக் கீழுள்ள பாகங்க்கள் 'சக்திகூட'த்தின் உருவமாக இருப்பவள்
मूलमन्त्रात्मिका Mulamantratmika மூலமந்திரத்தின் உருவானவள்
मूलकूटत्रयकलेवरा mulakutatraya kalebara மூல மந்திரத்தின் மூன்று பகுதிகளால் ஆன சூக்ஷ்ம உடலைக் கொண்டவளே
कुलामृतैकरसिका Kulamrutaikarasika 'குலா' என்ற அம்ருதத்தின் ரசிகை
कुलसङ्केतपालिनी kulasanketapaline 'குலா' என்ற யோக மார்க்கத்தின் வழிமுறைகளைக் காப்பவளே
कुलाङ्गना Kulangana உயர்ந்த குலத்தில் பிறந்தவளே
कुलान्तस्था Kulantastha குலவித்யையில் உரைபவளே
कौलिनी kaolinee குலத்திற்கு உரியவளே
कुलयोगिनी kulayogini குலத்தின் யோகினி(தேவி)
अकुला Akula குலமற்றவள்
समयान्तस्था samayantasdha காலத்திற்குள் உறைபவள்
समयाचारतत्परा samayachara tatpara சமயா என்ற வழிபாட்டு முறையுடன் இணைக்கப்பட்டவள்
मूलाधारैकनिलया Muladharaika nilaya மூலாதாரத்தில் எப்போதும் இருப்பவள்
ब्रह्मग्रन्थिविभेदिनी bramhagrandhi vibhedini பிரம்ம முடிச்சை உடைத்துச் செல்பவள்
मणिपूरान्तरुदिता Manipurantarudita மணிபூர சக்ரத்திற்குள் உதிப்பவள்
विष्णुग्रन्थिविभेदिनी vishnugrandhi vibhedine விஷ்ணு முடிச்சை உடைத்துச் செல்பவள்
आज्ञाचक्रान्तरालस्था Aagyna-chakrantaralasdha ஆஞ்ஞா சக்ரத்தின் மத்தியில் இருப்பவள்
रुद्रग्रन्थिविभेदिनी rudra-grandhi vibhedini ருத்ர முடிச்சை உடைத்துச் செல்பவள்
सहस्राराम्बुजारूढा Sahasraranbujaruda ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில் ஏறு அமர்பவள்
सुधासाराभिवर्षिणी sudhasarabhivarshinee அம்ருத தாரைகளாக வர்ஷிப்பவள்
तडिल्लतासमरुचिः Tadillata samaruchi மின்னற் கொடியைப் போன்ற அழகுள்ளவள்
षट्चक्रोपरिसंस्थिता shatchakropari sansdhita ஆறு சக்கரங்களின் மேல் திகழ்பவள்