मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका
Mukha-chandra kalankabha mruga-nabhi visheshaka
நிலவில் இருக்கும் கறையைப் போன்று நெற்றியில் புனுகைத் திலகமாக அணிந்தவள்
वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका
Vadanas-mara mangalya gruhatorana chillika
காமனின் இல்லமே உன் முகமென்றால் அதன் தோரண வாயிலே உன் புருவங்கள்
वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना
Vaktra-lakshmi pari-vaha chalan-minabha lochana
முகத்திலிருந்து பாயும் அழகு எனும் நதியில் நீந்தும் ஒளிமிக்க மீன்களே கண்களாகக் கொண்டவள்
नवचम्पकपुष्पाभनासादण्डविराजिता
Nava-chanpaka pushpabha nasa-danda virajita
புதிய செண்பக மலரின் மொட்டு போன்ற நாசியால் ஜொலிப்பவள்
ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा
Tarakanti tiraskari nasa-bharana bhasura
நட்சத்திரங்களின் ஒளியை பழிக்கும் மூக்குத்தியை அணிந்தவள்
कदम्बमञ्जरीक्लृप्तकर्णपूरमनोहरा
Kadanba manjari klupta karna-pura mano-hara
கடம்ப மலர் கொத்துகளை காதணியாய் அணிந்ததால் மனதை வசீகரிப்பவள்
ताटङ्कयुगलीभूततपनोडुपमण्डला
Tatanka yugali-bhuta tapa-nodupa mandala
சூர்ய சந்திரர்களை தாடங்க இணையாக அணிந்திருப்பவள்
पद्मरागशिलादर्शपरिभाविकपोलभूः
Padma-raga shila-darsha pari-bhavi kapolabhuh
பத்மராக கற்களால் செய்த ஆடியின் ஒளியை மிஞ்சும் கன்ன ஒளியைக் கொண்டவள்
नवविद्रुमबिम्बश्रीन्यक्कारिरदनच्छदा
Nava-vidruma binbashree nyakkari radanachada
புதிதாய் வெட்டப்பட்ட பவளத்தின், கோவைக் கனியின் ஒளியை மிஞ்சும் ஒளி கொண்ட அதரங்களைக் கொண்டவள்
शुद्धविद्याङ्कुराकारद्विजपङ्क्तिद्वयोज्ज्वला
Shudha vidyankurakara dvijapankti dvayojvala
சுத்த ஞான அரும்புகளைப் போல ஜ்வலிக்கும் பல்வரிசைகளைக் கொண்டவள்
कर्पूरवीटिकामोदसमाकर्षिदिगन्तरा
Karpura-vitikamoda samakarsha digantara
எல்லா திசைகளிலிருந்தும் அனைவரையும் தன் வாசனையால் ஆகர்ஷிக்கும் கற்பூர வெற்றிலைச் சுருளை சுவைப்பவள்
निजसल्लापमाधुर्यविनिर्भर्त्सितकच्छपी
Nijasanlapa madhurya vinirbhastitakachapi
தன் மொழியின் இனிமையால் சரஸ்வதியின் வீணையையும் தோற்கடிப்பவள்
कामेश्वरप्रेमरत्नमणिप्रतिपणस्तनी
Kameshvara prema-ratna mani prati-panastani
காமேஸ்வரன் அளிக்கும் பிரேமம் என்னும் இரத்தினத்துக்கு பரிசாய் தன் ஸ்தனங்களை அளிப்பவள்
नाभ्यालवालरोमालिलताफलकुचद्वयी
Nabhyalavala romali lata phala kuchadvaei
உந்திச் சுழியிலிருந்து மேலேறும் மெல்லிய மயிர்க்கொடியில் பழுத்த பழங்களான் ஸ்தனங்களை உடையவள்
लक्ष्यरोमलताधारतासमुन्नेयमध्यमा
Lakshya romalata dharata samunneya madhyama
மயிர்க்கொடி தொடங்குவதால் தான் கண்ணுக்கே தெரியும் இடையைக் கொண்டவள்
स्तनभारदलन्मध्यपट्टबन्धवलित्रया
Stana-bhara dalanmadhya patta-bandha-valitraya
ஸ்தனபாரத்தில் இடை உடைந்து விடாதிருக்க மூன்று மடிப்புகள் கொண்ட இடையை உடையவள்
अरुणारुणकौसुम्भवस्त्रभास्वत्कटीतटी
Arunaruna kaosumbha vastra bhasvatkatitati
குங்குமப்பூவின் வண்ணத்தில் தோய்ந்த உதிக்கும் சூரியனின் சிவப்பை ஒத்த இடையாடையை அணிந்தவள்
कामेशज्ञातसौभाग्यमार्दवोरुद्वयान्विता
Kamesha-gynata saobhagya marda-voru dvayanvita
காமேசனுக்கு மட்டுமே தெரியும் சௌபாக்கியத்தைக் கொண்ட மென்மையான் இரு தொடைகளைக் கொண்டவள்
माणिक्यमकुटाकारजानुद्वयविराजिता
Manikya makuta kara janudvaya virajita
மாணிக்கத்தால் செய்யப்பட்ட மகுடங்களைப் போன்ற இரண்டு முட்டிகளை உடையவள்
इन्द्रगोपपरिक्षिप्तस्मरतूणाभजङ्घिका
Indra-gopa parikshipta smaratunabha janghika
ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மன்மதனின் அம்புறாத்தூணியைப் போல் உள்ள கெண்டைக் கால்களைக் கொண்டவள்
नखदीधितिसंछन्ननमज्जनतमोगुणा
Nakhadidhiti sanchanna namajana tamoguna
தன்னை நமஸ்கரிப்பவரின் அறியாமை இருளை முற்றிலும் போக்கும் ஒளி கொண்ட நகங்களைக் கொண்டவள்
पदद्वयप्रभाजालपराकृतसरोरुहा
Padadvaya prabhajala parakruta saroruha
தாமரைகளைத் தோற்கடிக்கும் ஒளி கொண்ட பாதங்களைக் கொண்டவள்
सम्पत्करीसमारूढसिन्धुरव्रजसेविता
Sampatkari samaruda sindhura vrajasevita
'சம்பத்கரி'யால் திறமையாக நடத்தப்படும் யானைப்படையால் சேவை செய்யப் படுபவள்
अश्वारूढाधिष्ठिताश्वकोटिकोटिभिरावृता'
Asvarudadhishtitasva koti koti bhiravruta
அஷ்வாரூடை'யினால் நடத்தப்படும் கோடி கோடியான குதிரைப் படைகளால் சூழப்பட்டவள்
चक्रराजरथारूढसर्वायुधपरिष्कृता
Chakra-raja ratharudha sarva-yudha parishkruta
அனைத்து ஆயுதங்களும் கொண்ட சக்ர ராஜத் தேரில் ஏறி அமர்ந்து ஜொலிப்பவள்