அர்த்தமற்றவை

எல்லாமும்
எல்லாமும்

எந்த அர்த்தமும் அற்றவை

மூக்கின் ஓரத்தில்
ஆடும்
சிறு காற்றை

முட்டுத் தட்டாது
அழுத்திப் பிசையாது

அனுமதிக்கும்
நெஞ்சுக் கூட்டைத் தவிர