அவசரம்

அவசர அவசரமாய்
உனக்குள் இருக்கும்
என்னில்

என்னை
நிறைக்கப் பார்க்கிறாய்

பல சமயம்
நான் சிறுத்திருக்கிறேன்

சில சமயம்
நான்
எஞ்சி விடுகிறேன்

பாவம்
உனக்குத் தான்
எப்போதுமே
ஏமாற்றம்