தீயாய்..

எத்தனை  கருணையற்ற  வார்த்தை  இது

கிடைத்தது  இவ்வளவு  தான்
தகுதி  அவ்வளவே
ஊழ்  இது
கண்ணறியா  வினைக்கான  பயன்
வினை  தான்  செய்ததா  என்ன
யாரறிவார்

என்னை  இது  அத்தனை  குறுக்குகிறது 
மூச்சு  முட்டச்  செய்கிறது

எத்தனை  கருணை  மிக்க  வார்த்தை  இது

உன்  பொறுப்பல்ல
முன்பே  முடிவாகி  விட்டது
வெறும்  நிமித்தம்  மாத்திரமே  நீ

என்னை  அத்தனை  லேசாக்குகிறது
எழுந்து  பறக்கச்  செய்கிறது

எரித்துப்  பறக்கச்  செய்யும்
தீயாய்