நான் பலூனாகிவிட்டேன்

என்னை  அழுத்தும்  எடை
கரைந்து  விட்டது

அசைதல்  இத்தனை  சுலபமா

என்னாலும்  இத்தனை  வேகம்  முடியுமா

என்  கெட்டித்  தோல் 
நீர்மை  கொண்டு  விட்டது

என்  கருமை
ஆழம்  கொண்டு  விட்டது

ஒரு  பலூனைப்  போல்  பறக்கிறேன்

அல்லது
நீர்க்குமிழியைப் போல்

முற்றிலும்
மூழ்கியிருக்கும்
இந்நீர்த்தொட்டியில்