என் உதயம்

உன்  அந்தி  தான்
எனக்கும்  அந்தி

நீ  கால்  நீட்டி  அமர்ந்து  விட்டாய்
நான்  தான்  இன்னும்  ஓடிக்  கொண்டிருக்கிறேன்

சரி  விடு
கொஞ்சம்  அதிக  ஓட்டம்
அவ்வளவு  தானே

நாளைச்  சூரியனை
கொஞ்சம்  மெதுவாக  வரச்  சொல்கிறேன்

வேறு  என்ன  தான்  செய்வது