அடுக்கு

என்
மனமெனும் விலங்கிற்கு
தனி மனம் உள்ளது
மூளையும்
உடலும் கூட

வேண்டிய வேடம் 
போட்டுக் கொள்கிறது
திட்டங்கள் வகுக்கிறது

தன் மனம் என்ன நினைக்கிறதென்பது
என் மனத்துக்கும்
எப்போதும்
தெரிவதில்லை
இறுதி வரைக்கும்
நடந்த பிறகும் கூட

இதற்குத் தானா அது
அறிந்ததும்
விக்கித்து விடுகிறது
என் மனம்

மனம் செய்யும்
அட்டகாசங்களை
பொறுக்கமுடிவதில்லை
என் மனதுக்கும்
அதன் மனதுக்கும்