கரையெல்லாம் தீ

ஒரு துளி

அவன்
உதட்டோரத்தில்
தெறித்து விழுந்தது

சுர்ரென சுட்டதும்
திடுக்கிட்டெழுந்து
வாயோரத்தை
தொட்டுப் பார்க்கிறான்

சுக்கிலமா

இல்லை
இரத்தம்

அல்லது
கண்ணீர் 

அதன் கரையில்
தீ

வாயைச் சப்புக்கொட்டிய படி
புரண்டு படுத்து
மற்றொரு முறை
துயில் 
கொள்ளத் துவங்குகிறான்