இசை

இதை  
இசைக்கவென
அணைத்து
என்  
மடியமர்த்திக்  கொள்கிறேன்

இன்று
முதல்  மீட்டலிலேயே
சுருதி  சேர்ந்து  விட்டது

உள்ளம்  
நிரம்பித்
தளும்புகிறது

ஒரு  கேவலாய்..

மீண்டும்
மீட்டத்
துவங்குகிறேன்

அடி  நாக்கு
வரை  
கூட
இனிக்கிறது

எங்கோ
ஆழத்தில்
ஒரு
சின்னப்  பறவை
வேக  வேகமாய்
சிறகடித்துக்  கொள்கிறது

இனி 
பறத்தல்
தான்

மீட்ட  மீட்ட
என்னிலிருந்து
எழுந்த
நானாய்