புதிது

முடிந்து
பூரணமான
அழகிய
ஒரு  சித்திரத்தை
அளிக்கிறேன்

கலைத்துப்  போட்ட
ஒன்றைக்  கொடு  
என்  கதையை
நானே  எழுதிக்  கொள்கிறேன்
என்கிறாள்

மனமும் தொடாத
முழுப்புதிது  தான்
வேண்டுமாம்

பிச்சி