பாராமுகன்

நான்
எப்போதும்
உன்னை
கடிந்து கொள்கிறேன்

உன் முகம்
வாடுவது
எனக்குத் தெரிகிறது

மன்னித்து விடு

உன்னிடமிருந்து
கண்களை
என்னால்
திருப்பவே இயலவில்லை

நான்
உன்னை
வெறுக்கத் தொடங்கும் போது

உன்னிலிருந்து
என்னை
விலக்கிக் கொள்கிறேன்