மழையறிபவன்

வெளித்  தெரியாது
மணலோடு  மணலாக
காத்துக்  கிடக்கின்றன

கோடி  விதைகள்

ஒரு  துளி  ஈரத்துக்காய்
 
தூறல் கூட போதும்

மஞ்சளால்
நிறைத்து  விடுகிறது
தன்னை

பாலைக்கு மட்டுமே
தெரிகிறது
மழையை