ஆடியின் நாக்கு

திமிறிப்  பரந்தனள்
கட்டற்ற  காற்றாய்

நான்கு  சட்டகங்கள்
ஓர்  ஆடி

முன்  நிற்கிறாள்

உற்று  நோக்க

தெரிகிறது
ஆடியை  வேண்டும்
அவள்  கண்களில்

ஒரு
பிச்சைக்காரக்  களை