என் சக்கரம்

சுழன்று சுழன்று
சுற்றி சுற்றி
தன் குழிக்குள்ளேயே புதைந்து
எரி தீர தீர
மெல்ல மெல்ல
முற்றிலுமாய்
அடங்கி விடுகின்றன

நான் பொருத்தி வைத்த
என் முற்றத்து
சக்கரங்கள்

சுற்ற சுற்ற
எரிய எரிய
இன்னு இன்னுமென
பிரம்மாண்டமாய்
சுடர்ந்து சுழலும்
உன்னவை
போலன்றி