எதிர்வினைகள்

1. இந்தப் புத்தகத் திருவிழாவில் ஒரேயொரு கதை புத்தகம்தான் வாங்குவேன் என்பவர்கள் மழைக்கண் வாங்கலாம். ஒரேயொரு கவிதைப் புத்தகம்தான் வாங்குவேன் என்பவர்கள் கல்பனா ஜெயகாந்தனின் ‘இம்ம் என்றமைந்திருக்கும் ஆழ்கடல்’ தொகுதியை வாங்கலாம்.

—-எழுத்தாளர் செல்வேந்திரன் (25/02/2022)

2. புத்தக சந்தைக்கு இசை தேவ தேவன் கவிதைகளின் புதிய தொகுதிகள் வரவிருப்பதாக அறிகிறேன். கூடவே நமது நண்பர்கள் கவிஞர் ஆனந்த், கவி கல்பனா ஜெயகாந்த் போன்றவர்களின் முதல் கவிதை தொகுப்புகளும். நாளை வரும் யாரோ ஒரு வாசகர், யாரோ ஒரு எழுத்தாளருக்கு இந்தக் கவிகளின் கவிதைகள் குறித்து இப்படி எழுதிப் பரவசம் காணும் நிலை இப் புதிய கவிகளுக்கும் அமையட்டும்

—கடலூர் சீனு(21/02/2022)

3. மாஷா,

வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

‘’சிறகு’’ கவிதை வாசித்தேன். சிறப்பான கவிதை.

’’பவள மணிக்கண்’’ என்னும் சொல்லே பறவையை மேலும் பறவையாக்குகிறது. அந்த சொல்லே அந்த பறவையின் நுண் இருப்பை நுண் உயிர்ப்பை என வாசக கற்பனையில் விரிவாக்கிக் கொண்டே செல்கிறது. 

‘’விளிம்பின் முனை’’ என்பது மிகச் சிறப்பான படிமம். 

அன்புடன்,

பிரபு (20/2/2022)

4. மாஷா,

சமீபத்தில் பதிவிட்ட கவிதைகளை வாசித்தேன். 

துணை , ‘ம்’ என்று மீட்டினால் ஒலிக்கும் ஏக்தாராவின் துணையுடன் பயணிக்கும் ஆத்மனின் அகத் தவிப்பைக் கூறும் கவிதை. அந்த ஆத்மன் பயணத்தில் காண்பது மலைகளை மரங்களை பறவையொலிகளை – அவற்றினூடாகத் – தன்னை. 

அன்புடன்,

பிரபு (5/02/2022)