சிறகு

பவள மணி கண்ணெடுத்து
உற்று நோக்குகிறது
அதள பாதாளத்தை

சின்னஞ்சிறு
சிவந்து
வளைந்த
மெல்லிய கால்களின்
ஒரு பாதி மட்டுமே
அவ்விளிம்பின் முனையை
இறுகப் பற்றியிருக்கிறது

குனிந்து நோக்கிய
அது

சுறீரென
பாய்கிறது

சிறகை மட்டுமே நம்பி