பெருவாய்

வாட்டி
வதக்கி
வறுத்து

சுருட்டி

இட்டுக்  கொள்கிறது

ஆயிரம்
நாவுகள்  கொண்ட
தன்
பெருவாயில்

வறுத்துண்பவை  தான்
ருசிப்பவை  அல்லவா?