என் துளி

ஒரு  துளி
ஒரே ஒரு துளி தான்
இறைஞ்சுகிறேன்

நான் இருக்கும் மட்டுமாவது
இக் கட்டு தளராது
எனை இறுக்கிப் பிடித்துக் கொள்ள

கோடி கோடி துளிகளுக்கிடையே
என் துளி
என் கடவுள் துளி

காத்திருக்கிறேன்
ஒற்றைக்காலில் நின்றபடி
ஐந்து நெருப்புகளுக்கிடையே தான்

இன்னும்
வேறென்ன தான் செய்யட்டும்