எதிர்வினைகள்

மாஷா,
‘’பறக்கும் பெருமலர்’’ வாசித்தேன். 
நறுமணத்தால் பரவும் தன்மையையும் தன்னியல்பால் குவியும் தன்மையையும் கொண்டது மலர். 
‘’பறக்கும் பெருமலர்’’ மிகப் பெரியது. பெரும் தடாகம் ஒன்றின் ஒருபுறத்தில் மானொன்று நீர் அருந்துகிறது. இன்னொரு புறத்தில் புலியொன்று நீர் அருந்துகிறது. இரண்டுமே தடாகத்தால் இணைக்கப்படுகின்றன. 
‘’பறக்கும் பெருமலர்’’ன் ஒரு இதழும் இன்னொரு இதழும் தூரத்தால் விலகியிருக்கவில்லை. தூரத்தால் சமீபித்து இருக்கவும் இல்லை. மலராக அவை இணைந்து உள்ளன. 
இந்த கவிதை ஒரு ‘’அத்வைத நிலை’’யைப் பேசுவதாக எனக்குத் தோன்றியது. 
அன்புடன், பிரபு – 28/1/2022

மாஷா,
’’தேன்பிசுக்கு’’ கவிதை வாசித்தேன்.
தொடத் தொட என்பதில் ஒரு தயக்கம். ஒரு விருப்பமின்மை. தயக்கத்துடன் தொட்டாலும் தொட்டுத் தொட்டு பெருகுகிறது என்ற அவதானம். பெருகும் ஒன்றைத் தொடத் தயக்கம் ஏன் என்ற கேள்வி வாசக இடைவெளி.
எண்ண எண்ண சுழல்வது அது. எனினும் விரிவாவது. சுழலாய் மண் நோக்கிச் சென்று பின்னர் விரிந்து வானம் நோக்கி செல்வது எது? 
வாழ்ந்து மடியவே விரும்புகிறேன் என்பது மானுட துக்கம். 
ஒரு சிரிப்புடனும் இரு துளி கண்ணீருடனும் மீண்டும் தேனினிமை நோக்கி செல்லுதல் வாழ்வின் அழகு.
நல்ல கவிதை.
அன்புடன்,பிரபு – 3/1/2022

மாஷா,
அன்னை / இமையாது இரண்டுமே மிக உக்கிரமான கவிதைகள். 
’’இமையாது’’ பல திசைகளில் கிளை பரப்பி விரிகிறது. 
அன்புடன்,பிரபு – 7/12/2021