பறக்கும் பெருமலர்

ஆயிரம்  இதழ்  கொண்ட  பெருமலரது

நான்
ஒரு  இதழைப்  பற்றிக்  கொள்கிறேன்
நீ  மற்றொன்றை

பற்றியதும்
உந்தியெழுந்து
பறந்து  பறந்து

நலமாய்
சேர்த்துவிடுகிறது
அம்மலர்

என்னை
என்
கனவில்

உன்னை
உனதில்