தேன்பிசுக்கு

தொடத் தொட
தொட்டுத் தொட்டு
பெருகுகிறது

எண்ண எண்ண
சுழன்று சுழன்று
இறுக்கி
மீண்டும் இறுக்கி
மேலும்
விரிகிறது

எதையும் தொடாது
எதிலும் படாது
கைகளை இறுக மூடியபடி

வாழ்ந்து மடியவே விரும்புகிறேன்

ஒரு அசட்டுச் சிரிப்புடனும்
இரு துளி கண்ணீருடனும்
மீண்டும்
இத்தேன்பிசுக்கில்
சிக்கிக் கொள்கிறேன்