இனிப்பென்று..

HD wallpaper: Fantasy, Forest, Cottage, Green, House, Tree, plant,  architecture | Wallpaper Flare
நாளை  
வீடு திரும்புகிறேன்

என்
செல்ல
வீடு

பேசாது என்னை
சூழ்ந்து கொண்டு
உற்றுப் பார்த்தபடியிருக்கும்

அதை எனக்கு
மிகப் பிடிக்கும்
அதற்கும்..

என்று தான் நினைக்கிறேன்

மௌனத்தின் ஒலி
இனிப்பென்று

இம்முறையும்
கற்பனை செய்து கொள்கிறேன்