பஞ்சுப் பொதி

எதிரொலியே  அற்ற

பஞ்சுப்  பொதி
காலெடுத்துவைத்து

எச்சமின்றி
கரைந்தழிய
விழையத்தான்  செய்கிறேன்

சிறு  கீற்றலாவது
கீற்றித்தான் விடுகின்றன
கால்  நகங்கள்

தொடத்  தொடப்
பெருகுகிறது  

செயல்

சொல்
எண்ணம்
காலம்