அன்னை

அவள்
உன்

கழுத்தை  நெறித்துக்  கொல்லவில்லை
வேசை எனச்  சான்றுரைக்கவில்லை
உனையன்றி  மற்றொருவரைத்  தேரவில்லை
ஒவ்வொன்றுக்கும்  விலை  பேசவில்லை

நல்லது
நீ  அதிர்ஷ்டசாலி

உனக்கு  வாய்த்தவள்
அன்னையே தான்

அவள்  இருக்கும்  திக்கை
கிடையாக  விழுந்து
வணங்கிக்  கொள்

ஆயிரத்தில்  ஒருத்தி

அவள்  எரியில்  குளிர்  காய்கின்றன
மற்றனைத்தும்

அவள்  தோளில்  அமைந்திருக்கிறது 
இவ்வுலக  அச்சின்
ஒரு சிறு முனை