
திரைச்சீலையாய் மென்காற்று முகம் தழுவிச் செல்ல கடலுக்கும் வானுக்கும் எதிரில் என்னிசையை கேட்டபடி சொக்கிப் போயிருக்கிறேன் சட்டென்று கால் உரசிச் செல்கிறது என் கட்டில் கீழிருந்து மெல்லடி எடுத்து வைத்து ஓர் வெள்ளைப் பூனை பதறி குனிந்து பார்க்கிறேன் வெளி வருகின்றன மறைந்திருந்தவையெல்லாம் ஒவ்வொன்றாய் வரிசையாய்