ஆழப்பெருநதி

அவ்வாழப்பெருநதி  
தான்
எத்தனை  பிரம்மாண்டம்
எத்தனை  சத்தியம்

எத்தனை  இனியது

அத்தனை  
சுழிகள்  
கொண்டோடுகிறது

இரகசியமாய்

கணம்  கணமென
நிறைத்தபடி
அனைத்தையும்
இணைத்தபடி
அள்ள  அள்ள
மிடறு  மிடறாய் அளித்தபடி