
கழுத்தை நெறிக்கும் போது உன் கைகள் அதே போல் மயிரடர்ந்து விடுகின்றன எட்டி உதைக்கின்றன குச்சிக் கால்கள் நரைத்த கட்டை மீசை இப்படித் திரும்பும் போதோ அப்படி நடக்கும் போதோ சட்சட்டென தெரிந்து விடுகிறது அச்சாயல் இங்கு எனக்கு இதுதான் போல என் பயமெல்லாம் இப்போது என் தெய்வமும் அப்படியோ