கழற்றி வைத்த உலகம்

அதன்
கடைசி  துளியும்
எனைக்
கைவிட்ட  போது

நொறுக்கிப்  பிசையும்
துயரில்  ஏறி

நான்
அங்கு
சென்று  சேர்ந்திருந்தேன்

அவ்விடத்தில்
இருந்து
பார்த்தபோது  தான்
கண்டு கொண்டேன்

முன்பு
எப்போதும்
கண்டிராத
புள்ளிகளை

ஒன்றொடொன்று
கை  கோர்த்த படி
அவை
உருவாக்கும்
கோலங்களை

கண்மூடிக்  கொள்கிறேன்

இதோ
இங்கு தான்
இருக்கின்றன
அவையெல்லாம்

எனைச்
சுற்றிச் சுற்றி

நான்  தான்
அவற்றை
என்
கண்களிலிருந்து
கழற்றி  வைத்திருந்திருக்கிறேன்