
அம்பலத்தில் ஆடுகிறேன் தத்தித் தரிகிட.. நாணுகிறேன் புன்னகைக்கிறேன் வெடித்துச் சிரிக்கிறேன் வெட்கிக் கூசிகிறேன் பயந்து நடுங்குகிறேன் அழுகிறேன் அழவைக்கிறேன் அழுத்தி அமிழ்ந்து போகிறேன் பின் ஒரு நொடி அனைத்தையும் உதறி துள்ளிக் குதிக்கிறேன் கால்கள் தரையில் படாதவாறு அந்தரத்தில் தளாங்கு தரிகிட..